தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்குமாம்.." என்ன காரணம் தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் நட்சத்திர தொகுதிகளில் பெரியளவில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது அதிமுகவுக்குச் சாதகமாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர் கலை தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. மாநிலத்தில் 69.46% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது.
யாருக்குச் சாதகம்: இதற்கிடையே இது தொடர்பாக அரசியல் விமர்சகர் கலை டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அதாவது எந்தெந்த தொகுதிகளில் எல்லாம் வாக்கு சதவிகிதம் பெரியளவில் குறைந்துள்ளதோ அங்கெல்லாம் அது அதிமுகவுக்குச் சாதகமாக மாறலாம் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது ஸ்டார் தொகுதிகளில் 6-10% வரை வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. நட்சத்திர தொகுதிகளுக்கு வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது.. அதாவது நட்சத்திர வேட்பாளர்களும் கூட மக்கள் வாக்களிக்க வரவில்லை என்பதையே இது காட்டுகிறது.
பாஜக வாய்ப்பில்லை: வாக்கு சதவிகிதம் குறைந்த தொகுதிகளில் பாஜக வெல்ல வாய்ப்பே இல்லை. அதேநேரம் ஏற்கனவே வென்றவர்களின் வாக்குகளும் குறைந்து இருக்கிறது. அதாவது இந்த தொகுதிகளில் போட்டி கடுமையானதாக மாறியுள்ளது. சில ஆயிரம் தொகுதிகளில் இந்த தொகுதிகளில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். 10% வரை குறைந்துள்ளது என்றால் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் குறைவாகப் பதிவாகி இருக்கிறது.
திமுகவுக்கு உள்ள சிக்கல்: திமுக வேட்பாளர்களுக்கும் இதில் சிக்கல் தான். ஏனென்றால் கடந்த 2019இல் பாஜக- அதிமுக கூட்டணியில் இருந்தது. அப்போது மாநிலத்திலும் அதிமுக ஆட்சியில் இருந்ததால்.. ஆளும் தரப்பிற்கு எதிரான மனநிலையும் திமுகவுக்குச் சாதமாக இருந்தது. ஆனால், இந்த முறை திமுக தான் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. அவர்கள் மீது மக்கள் அதிருப்தி இருக்கவே செய்கிறது.
அதிமுகவுக்குச் சாதகம்: அதேபோல பாஜக மீதும் அதிருப்தி இருக்கிறது. அதேநேரம் அதிமுக மீது பெரியளவில் அதிருப்தி இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இல்லை. எனவே, வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது என்னைப் பொறுத்தவரை அதிமுகவுக்கே சாதகமாக இருக்கும். வாக்கு குறையும் போது பாஜக காணாமலேயே போய்விடும். அதிமுக தான் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.
சென்னையில் கடந்த காலங்களிலும் வாக்குப்பதிவு குறைவாகவே பதிவாகி இருக்கிறது. கடந்த முறை நாட்டிலேயே குறைந்தபட்ச வாக்குகள் பதிவான தொகுதியாகச் சென்னை இருந்தது. ஆனால், கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது ஓரிரு சதவிகிதம் தான் குறைந்துள்ளது. இதுபோன்ற தொகுதிகளை நான் குறிப்பிடவில்லை.. எங்கெல்லாம் 5 முதல் 10% வரை பெரியளவில் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளதோ.. அங்கு தான் அதிமுக வெல்ல வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறேன்.
பாதிக்கும்: சென்னையைப் பொறுத்தவரை வெயில் அதிகம்.. மேலும், தொடர் விடுமுறையால் பலரும் சொந்த ஊர்களுக்கும் கிளம்பிவிட்டனர். எனவே, இந்த தொகுதிகளில் வாக்கு சதவிகிதம் கொஞ்சம் குறைந்துள்ளது திமுகவுக்கு எதிராகப் போகும் எனத் தோன்றவில்லை. அதேநேரம் தூத்துக்குடி, தேனி போன்ற தொகுதிகளிலும் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. இங்கெல்லாம் வாக்கு சதவிகிதம் குறை என்ன காரணம் என்பது கூட தெரியவில்லை. இதுவும் கூட ஆளும் தரப்பைப் பாதிக்கிறது" என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications