ஓபிஎஸ், இபிஎஸ்க்கு கொஞ்சம் “ரிலாக்ஸ்” - அதிமுக தலைமையக கலவரம்.. உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பதிவான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 23 ஆம் தேதி அதிமுக சார்பில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்து பாதியில் முடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டினர்.

ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்குகளில் வென்று சென்னை வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 2 வது பொதுக்குழு கூட்டத்தை பிரம்மாண்டமாக கூட்டினார். இதில் அவர் இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

அதிமுகவினர் கலவரம்

அதிமுகவினர் கலவரம்

இது ஒருபக்கம் இருக்க பொதுக்குழு நடைபெற்ற நேரத்தில் அதிமுக தலைமையகத்தை கைப்பற்றிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முக்கிய கோப்புகளை கைப்பற்றி சென்றனர். அப்போது, அவர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

இதனை தொடர்ந்து இரு தரப்பையும் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர்.

முன்ஜாமின் வழக்கு

முன்ஜாமின் வழக்கு

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஈ.பி.எஸ். தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 37 பேர், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 27 பேர் என 64 பேர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சதிஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பை சேர்ந்த 64 பேருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 64 பேரும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திடவும், தலா 20 ஆயிரம் ரூபாயை அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்தவும் நிபந்தனைகளை விதித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+