3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து நேரடி ஹஜ் பயணம்! வழியனுப்பி வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்!
சென்னை: 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் Jeddah நகருக்கு நேரடி விமானம் இயக்கப்படும் நிலையில் ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ். வசதி படைத்தவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமியர்களுக்கான கடமைகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் துல்ஹஜ் மாதத்தில் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் கோடிக்கணக்கில் மக்கா நகரில் குவிவார்கள்.

அந்த வகையில் தமிழகத்திலிருந்து 4,000க்கும் மேற்பட்டோர் இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். அதேபோல் புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்களும் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹஜ் யாத்திரை புறப்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் Jeddah நகருக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படவில்லை.
இதையடுத்து இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் மேல் கடிதம் எழுதி ஒரு வழியாக இந்தாண்டு சென்னையிலிருந்து நேரடி ஹஜ் விமானத்தை இயக்க வைத்திருக்கிறார். நேற்று முதல் வரும் 21ஆம் தேதி வரை சென்னையிலிருந்து ஹஜ் விமானங்கள் தினமும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் புறப்பட்ட முதல் குழுவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் ஆகியோர் சென்னை விமான நிலையத்திலிருந்து வழியனுப்பி வைத்துள்ளனர்.
முன்னதாக ஹஜ் பயணிகள் சிரமமின்றி மெக்கா மதினா பயணத்தை முடித்துக்கொண்டு நல்லபடியாக தாயகம் திரும்ப வேண்டும் என சிறப்பு துஆ நிகழ்வும் நடைபெற்றது..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications