அடுத்த ஷாக்.. ஐஸ்வர்யாவை தொடர்ந்து நடிகர் ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா போலீசில் புகார்!என்னாச்சு?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சமீபத்தில் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் இப்போது இளையமகள் சவுந்தர்யா போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தற்போது போயஸ்கார்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் மார்ச் மாதம் தேனாம்பேட்டை போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். அதில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போனதாக தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய தேனாம்பேட்டை போலீசார் அவரது வீட்டு பணிப்பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். அதாவது பணிப்பெண் ஈஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.
மேலும் அவர் நகைகளை விற்று கணவர் அங்கமுத்துவின் வங்கி கணக்கில் பணத்தை சேமித்ததும், அதன்பிறகு அந்த பணத்தை வைத்து சொத்துகள் வாங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரியை கைது செய்துள்ள போலீசார், நகைகளை மீட்கும் பணியை தொடங்கினர்.
இந்நிலையில் ஐஸ்வர்யாவை தொடர்ந்து நடிகர் ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா தேனாம்பேட்டை போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த மாதம் 24ம் தேதி போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு வேறு காரில் சென்றேன். இந்த வேளையில் எனது ரேஞ்ச் ரோவர் காரின் சாவியை உடன் வைத்திருந்தேன். அப்போது சாவி மாயமாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் போலீசார் புகாரை பெற்று கொண்டனர். இருப்பினும் வழக்குப்பதிவு செய்யவில்லை. பொதுவாக விலை உயர்ந்த கார்களின் சாவிகள் மாயமானால் அதனை எடுத்து சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் சிக்கல்கள் ஏற்படலாம். இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கையாக சவுந்தர்யா தேனாம்பேட்டை போலீசில் நேற்று இரவு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications