"நிக்கல் நிக்கல்.." வார்த்தையை தவிர்த்த ஆளுநர்.. பொங்கி எழுந்த நெட்டிசன்கள்! பரபர ஹேஷ்டேக் டிரெண்டிங்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் தேசிய கீதத்திற்கு முன்பே ஆளுநர் வெளியேறிய சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், ஆளுநர் ரவிக்கு எதிராக பல்வேறு ஹேஷ்டேக்குகளும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் எப்போதும் மரபுப்படி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தான் தொடங்கும். அதன்படி காலை கவர்னர் ரவி உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.
ஆளுநர் ரவி தனது உரையைத் தொடங்கும் போதே அவையில் கூச்சம் குழப்பம் நிலவியது. ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் கோஷங்களை எழுப்பினர். மேலும், சட்டசபையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.

ஆளுநர் ரவி உரை
ஆளுநர் ரவி தனது உரையை என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். ஆளுநரின் அந்த உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. குறிப்பாகச் சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் துணை நகரம் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. இது தவிரப் பெரியார் நினைவு சமத்துவபுரம், பரந்தூர் விமான நிலையம் என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதேநேரம் தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாகப் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

தவிர்த்த ஆளுநர்
ஆளுநர் உரையில் குறிப்பிட்ட சில வார்த்தைகளையும் ஓரிரு வரிகளையும் தவிர்த்துவிட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழ்நாடு அரசு என்ற வார்த்தையை உரையின் தொடக்கத்தில் வாசித்த ஆளுநர், அதன் பிறகு தமிழ்நாடு அரசு என்று வந்த இடங்களில் இந்த அரசு என்று வாசித்துள்ளார். மேலும், திராவிட மாடல் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்துள்ளார்.

குற்றச்சாட்டுகள்
இது மட்டுமில்லாமல் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு இருந்த பத்தியை அவர் படிக்கவில்லை.. மேலும், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகக் கூறப்பட்டிருந்த பத்தியையும் அவர் வாசிக்கவில்லை. இதற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காததின் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதித்துவிட்டதாகவும் சாடினர். மேலும், அவர் அரசியலமைப்பு சட்டத்தையும் மீறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தேசிய கீதம்
இதற்கிடையே ஆளுநர் தாமாக முன்வந்து பேசிய வார்த்தைகளை அக்குறிப்பில் பதிவேற்றக்கூடாது என்றும் அவைக் குறிப்பில் அரசு தயாரித்துக் கொடுத்த உரை மட்டுமே இடம் பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசினார். மேலும், இது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார். பொதுவாகத் தேசிய கீதத்திற்குப் பின்னரே ஆளுநர் அவையில் இருந்து வெளியேறுவார். ஆனால், அதற்கு முன்பே இப்படி ஆளுநர் வெளியேறியதும் சர்ச்சையானது.

ஹேஷ்டேக்
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க ட்விட்டரில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது. குறிப்பாக இந்தச் சம்பவம் நடந்த சில நொடிகளில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பை மீறும் வகையில் இருப்பதாகக் கூறி பலரும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஆளுநர் தவிர்த்த பகுதி என்ன என்று விளக்கியும் அவர்கள் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

டிஆர்பி ராஜா
திமுகவின் டிஆர்பி ராஜா, "சட்டமன்றத்திலிருந்து MLAக்கள் வெளிநடப்பு செய்து பலரும் பார்த்திருப்பார்கள். முதல் முறையாக ஒரு ஆளுநர் வெளியேறியது இங்கு தான். எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்க இது உங்க மந்தி நாடு இல்ல... #பெரியார் #அண்ணா #கலைஞர் செதுக்கிய #தமிழ்நாடு #GetOutRavi நீங்கள் ஜனநாயகத்திற்கே ஒரு கறை" என்று பதிவிட்டுள்ளார். இன்னும் பல தலைவர்களும் இதுபோன்ற கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்

நிக்கல் நிக்கல்
சிலர் முதல்வர் பேசும் போது ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறிய படங்களைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், பலரும் ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த "நிக்கல்.. நிக்கல்.." பாடல்களைப் பதிவிட்டு வருகின்றனர். அரசால் அனுப்பப்பட்ட ஆளுநர் உரைக்கு முறையாக இவரே ஒப்புதல் அளித்துவிட்டு மாற்றிப் பேசுகிறார் என்றும் இது அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி
#GetOutRavi என்ற ஹேஷ்டேக் மட்டுமின்றி ஆளுநர் ரவிக்கு எதிராக மேலும் பல ஹேஷ்டேக்குகளும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக, ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசரச் சட்டத்திற்கு அவர் அனுமதி அளிக்காத நிலையில், அதற்கு எதிரான ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகி வருகிறது. பலரும் ஆளுநருக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications