ரோடு ஏன் இப்படி இருக்கு? கேள்வி கேட்ட ஸ்டாலின்.. இரவோடு இரவாக ரெய்டு விட்ட ராதாகிருஷ்ணன்.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் சாலைப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து சென்னையில் சாலை பணிகளை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார்.

தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் சென்னையில் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது, சென்னையில் செய்வது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

After CM Stalins anger, Chennai commissioner Radhakrishnan check the road works

இந்த பணிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இத்தர்காண் உத்தரவு தமிழ்நாடு அரசு மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு சென்றுள்ளது.

இதனால் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுக்க நடக்கும் சாலை பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் தமிழ்நாடு பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல.

மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ இரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகள் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற்றப்படவேண்டும். நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும். இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை. மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நானும் இதனை ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறேன். இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளேன்.

இனி சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக நான் ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன். சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்கவேண்டும் என்பதை கண்டிப்போடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதோடு, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக்கொள்கிறேன்., என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு: மழை காலம் தீவிரம் அடையும் முன் தமிழ்நாடு முழுக்க சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. முதல்வர் ஸ்டாலின் இதை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். மாவட்ட வாரியாக ஆய்வு பயணம் மேற்கொள்ள உள்ளார். மழைக்கு முன்பாக ஆய்வு பயணம் முடியும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன்பாக சாலை பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் சாலைப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து சென்னையில் சாலை பணிகளை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார். திரு.வி.க.நகர் மண்டலம், பல்லவன் சாலையில் நடைபெற்று வரும் சாலைப் பணியினை நேற்று இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மண்டல அலுவலர் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

சாலை பணிகளை உடனே முடிக்க வேண்டும் என்று கூறி ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+