அதிமுகவிலிருந்து விழுந்த முக்கிய விக்கெட்டுகள்! செந்தில் பாலாஜி டூ மனோஜ் பாண்டியன் வரை! லிஸ்ட் இதோ!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்ததும் கட்சியின் முன்னணி தலைவர்களாக இருந்தவர்கள் பலர் நீக்கப்பட்டும், திமுகவில் இணைந்தும் உள்ளனர். இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. அதிமுக- பாஜக கூட்டணி சேர்ந்தது முதல் அந்த அதிமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனால் அதிருப்தியாளர்கள் திமுகவுக்கு தாவி வருகிறார்கள். அந்த வகையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வரும் மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம் எம்எல்ஏ) அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இணைந்தார்.
வேறொரு இயக்கத்தை நம்பி அந்த இயக்கத்தின் சொல்படிதான் நடக்கிற துர்பாக்கியமான காலம்தான் தற்போது அதிமுகவில் இருக்கிறது. உழைப்பை அங்கீகாரம் தராத, உழைப்பு வேண்டாம் என ஒவ்வொரு தொண்டரையும் விரட்டக் கூடிய எடப்பாடி பழனிசாமியுடைய நோக்கம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம். அண்மையில் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தற்போது அவர் திமுக இலக்கிய அணித் தலைவராக உள்ளார்.
அது போல் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர், தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது தேனி மக்களவை உறுப்பினராகவும் இருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு தினகரன் அணியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். அவ்வாறு இணைந்த அவருக்கு 50 நாட்களுக்குள் கரூர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதுடன் அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திற்கு ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அது போல் கோவை செல்வராஜும் திமுகவில் இணைந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார்.
2020 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த லட்சுமமணனுக்கு விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அது போல் அதிமுகவில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இருந்த வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்ததும் இலக்கிய அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
அதிமுகவில் இருந்த எ.வ.வேலு பின்னர் திமுகவில் இணைந்தார். தற்போது பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்து வருகிறார். அது போல் சாத்தூர் ராமசந்திரன், எஸ்.ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.கண்ணப்பன், பி.கே. சேகர்பாபு ஆகியோரும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள். இவர்கள் அனைவரும் தற்போது திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர். அது போல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையிலும் மேற்கண்டவர்களில் சிலர் இருந்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைவோருக்கு திமுக நல்ல பதவிகளை வாரி வழங்குகிறது. அது போல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் யார் யார் என்பதையும் பார்க்கலாம்.
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், கே.சி.பழனிசாமி, வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, ஓ.பி.ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமசந்திரன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் வரிசையில் ஆவர்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications