"என்ன கொடூரம் இது.." போட்டோ போட்டு வருந்திய நிவேதா பெத்துராஜ்.. உடனே பறந்த அதிகாரிகள்.. செம ஆக்சன்!
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் நெட்டிசன்கள் பலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரபல மூன் லைட் உணவகத்தில் நேற்று ரைட் நடத்தப்பட்டது.
Recommended Video
நடிகை நிவேதா பெத்துராஜ் சென்னையில் இருக்கும் பிரபல மூன் லைட் ஹோட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரைட் ரைஸ் வாங்கி இருந்தார். இந்த பிரைட் ரைஸில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் வைத்த நிவேதா பெத்துராஜ், இன்ஸ்ட்டாவில் இதை பற்றிய புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.
உணவில் கரப்பான் பூச்சி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, அதிர்ச்சியாக புகார் அளித்து இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புகார்
இதன்பின் நிவேதா பெத்துராஜ் இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்பின் இணையத்தில் வரிசையாக பல நெட்டிசன்கள் மூன் லைட் உணவகம் குறித்து தங்கள் புகார்களை பகிர்ந்தார். நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டோம், எங்களுக்கும் இதேபோல் உணவில் கரப்பான் பூச்சி கிடந்த அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது என்று புகார் வைத்தனர்.

அதிர்ச்சி
இதையடுத்து பலரும் வரிசையாக புகார் வைத்ததை பார்த்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், நேரடியாக சென்னை மூன் லைட் உணவகத்திற்கு சென்று சோதனை செய்தனர். இந்த ரெய்டில் மூன் லைட் உணவகத்தின் சமையலறை இருந்த கோலத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு சமையலறை சத்தமின்றி மிக மோசமாக இருந்துள்ளது.

மோசம்
உணவகத்திற்கு உள்ளே பல இடங்களில் கரப்பான் பூச்சி கூட்டமாக குடியிருந்துள்ளது. அதேபோல் உணவு பொருட்கள் மிகவும் பழசாக இருந்துள்ளது. எந்த இடமும் சுத்தம் இன்றி, குப்பை கூடமாக கிடந்துள்ளது. முக்கியமாக நான் வெஜ் உணவுகள் எல்லாம் மிகவும் பழசாக இருந்துள்ளது. இதை பார்த்த அதிகாரிகள்.. என்ன கொடூரம் இது.

சுத்தம்
கொஞ்சம் கூட எதையும் சுத்தம் செய்ய மாட்டீர்களா? வாரம் ஒரு முறை சுத்தம் செய்தால் கூட இவ்வளவு மோசமாக இருக்காதே. மக்கள் ஆரோக்கியம் என்ன அவ்வளவு லேசான விஷயமா என்று கடுமையாக கண்டித்து உள்ளனர். இதையடுத்து அங்கிருந்த மொத்த உணவு பொருட்களையும் குப்பையில் கொட்டிவிட்டு, உணவகத்தை மொத்தமாக சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

உத்தரவு
இதையடுத்து இனி உணவை சுத்தமாக செய்யுங்கள்.. பழைய உணவுகளை பயன்படுத்தாதீர்கள்.. இதுதான் கடைசி வார்னிங் என்று உத்தரவிட்டுவிட்டு சென்றுள்ளனர். அந்த உணவகம் இருந்த நிலைக்கு சீல் வைத்திருக்க வேண்டும் என்றாலும், முதல்முறை என்பதால் வார்னிங்கோடு விட்டு உள்ளனர். மீண்டும் இதே தவறை செய்தால் சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications