ஒரு மாதத்துக்கு பின் மது கடைகள் திறப்பு- சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து கொண்டாடிய குடிமகன்கள்!
சென்னை: தமிழகத்தில் ஒரு மாதத்துக்குப் பின்னர் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. மதுபான கடைகள் 1 மாதத்துக்குப் பின்னர் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கடைகளில் குவிந்தனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமலில் உள்ளது. இந்நிலையில் லாக்டவுன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

லாக்டவுன் காலம்
லாக்டவுன் காலத்தில் கள்ள சந்தைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யபட்டன. அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் மதுபானங்கள் கடத்தி கொண்டுவரப்பட்டு பதுக்கி விற்கப்பட்டன.

மதுபான கடைகள் திறப்பு
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் இன்று முதல் 27 மாவட்டங்களில் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு 27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகளுக்கு பூஜை
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்ட உடனேயே தேங்காய் உடைத்து பூஜை செய்தனர் குடிமகன்கள்.

டோக்கன்கள் கூட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுபானங்கள் பெற டோக்கன்களும் கூட வழங்கப்பட்டன. சில இடங்களில் அதிகாலை முதலே மதுபானங்களை வாங்க குடிமகன்கள் டோக்கன் பெறுவதற்கு நீண்ட வரிசையில் சமூக இடைவெளி ஏதுமின்றி கூட்டம்கூட்டமாக ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு நின்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கூடுதல் விலைக்கு விற்பனை
பல இடங்களில் வழக்கத்தை விட டாஸ்மாக் மதுபானங்கள் விலை மிகவும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டதாகவும் குடிமகன்கள் புகார்கள் தெரிவித்தனர். அதேபோல் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி பைகளில், சாக்குகளில் என அதிக எண்ணிக்கையில் மதுபாட்டில்கள் குடிமகன்களுக்கும் வழங்கப்பட்டன.

முத்தமிட்டு பூஜை
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. மது வகைகளை வாங்கிய மது பிரியர்கள் கோவிலில் சுவாமி கும்பிடுவது போல சூடம் பத்தி காண்பித்து, இரு கைகளால் கும்பிட்டு மது பாட்டில்களை முத்தமிட்டு வினோதமான முறையில் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications