BIG BREAKING: ஓபிஎஸ்ஸை தொடர்ந்து.. திமுகவில் இணையும் ஜெயக்குமார், செல்லூர் ராஜு? பரபரக்கும் களம்!
சென்னை: ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் என அடுத்தடுத்து 'அறிவாலய' வாசலில் வரிசை கட்டிய விக்கெட்டுகளைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது. "இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்?" என்று ரத்தத்தின் ரத்தங்கள் கவலையில் இருக்க, இப்போது ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோரின் பெயர்கள் அரசியல் வட்டாரத்தில் 'ஹாட்'டாக அடிபடுகின்றன.
ராயபுரம் 'வெயிட்'.. திமுக போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவிற்கு ஒன்று என்றால் முதல் ஆளாக பேட்டி கொடுப்பவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடியின் நிழலாகவே இருந்தவர்களில் ஒருவர். ஆனால், அவர் கடந்த சில நாட்களாக கடுமையாக அமைதி காத்து வருகிறார். அதிமுக பற்றி பேசுவதே இல்லை. தேர்தல் காலத்தில் பலத்த சைலன்ட். அவரே திமுக பக்கம் சாய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுவதற்குப் பின்னால் சில காரணங்கள் உண்டு:

ராயபுரம் கணக்கு: கடந்த தேர்தலில் ராயபுரத்தில் தோல்வியடைந்த ஜெயக்குமார், மீண்டும் அங்கு ஜெயிக்க வேண்டுமானால் ஆளுங்கட்சியின் பலம் தேவை என நினைக்கிறாராம். வடசென்னை முழுக்க திமுக-வின் கோட்டையாக மாறி வரும் சூழலில், தனக்கான இடத்தை உறுதி செய்ய 'உதயசூரியன்' வெளிச்சம் அவருக்குத் தேவைப்படலாம். இவர் வெளிப்படையாகவே அங்கே கடந்த முறை தோற்க பாஜக காரணம் என்றார். கிறிஸ்துவ மீனவர்கள் பலர் இவருக்கு வாக்களிக்காமல் போக.. பாஜக கூட்டணிதான் காரணம்.
சீனியர்களுக்கு 'நோ'?: அதிமுக-வில் எடப்பாடியின் 'சேலம் டீம்' "கொங்கு கேங்" மட்டும் ஆதிக்கம் செலுத்துவது, ஜெயக்குமார் போன்ற சீனியர்களுக்கு ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல். "அடுத்து நமக்கும் சீட் கிடைக்குமா?" என்ற பயமே அவரைத் திசை திருப்பலாம். இந்த முறையும் தோற்றால் அரசியல் எதிர்காலம் காலி என்று ஜெயக்குமார் நினைக்கிறாராம்.
'தெர்மக்கோல்' புகழ் செல்லூர் ராஜு - மதுரையில் மாறுமா சீன்?
அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ள சமீபத்திய தகவல்களின்படி, தென் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுகவின் மற்றொரு மிக முக்கியமான மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஒருவர் திமுக தலைமைக்கு மிக நெருக்கமானவர்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த தென் மண்டல தலைவர் வேறு யாரும் இல்லை செல்லூர் ராஜு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அதிமுகவில்.. மதுரை என்றாலே செல்லூர் ராஜு தான். ஆனால், சமீபகாலமாக மதுரையில் எடப்பாடி தரப்பு புதிய முகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ராஜுவை ரொம்பவே நோகடித்திருக்கிறது.
தெற்கு மாவட்ட பலம்: முக்குலத்தோர் வாக்குகளைக் கவர திமுக தீவிரமாக இருக்கிறது. அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த செல்லூர் ராஜுவை இழுத்தால், மதுரையைத் தட்டித் தூக்கிவிடலாம் என்பது ஸ்டாலினின் 'மாஸ்டர் பிளான்'. தென் மண்டலத்தில் ஆர்.பி உதயகுமாருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதை செல்லூர் விரும்பவில்லையாம்.
பதவி மோகம்: பத்து வருடம் அமைச்சராக இருந்தவர், கடந்த ஐந்து வருடங்களாக பெரிய பதவியில்லாமல் இருப்பது அவருக்குப் பெரிய குறையாகவே இருக்கிறதாம். "ஜெயிக்கும் குதிரை" பக்கம் சாய்ந்தால் மீண்டும் அமைச்சராகலாம் என்ற கனவு அவரை அண்ணா அறிவாலயம் பக்கம் இழுக்கக்கூடும்.
"எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதை விட, ஆளுங்கட்சியின் நிழலில் ஒதுங்குவது பாதுகாப்பானது என்று இந்த மூத்த தலைவர்கள் கணக்குப் போடுகிறார்கள். இபிஎஸ்-ஸின் பிடியிலிருந்து அதிமுக-வின் 'தூண்கள்' சரியத் தொடங்கினால், 2026 தேர்தல் களம் எடப்பாடிக்கு பெரும் சவாலாகவே இருக்கும்!"


Click it and Unblock the Notifications
