மோதலுக்கு நடுவே.. ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின்! பின்னணி காரணம் இதுதான்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலையில் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேச உள்ளார். நிலுவை மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில் இருவரும் சந்தித்து பேசி வருகின்றனர். தமிழக ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்தது.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே மோதல் போக்கு என்பது நீடித்து வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போடுவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

அதற்கு ஆளுநர் ஆர்என் ரவியும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் வாயிலாக பதில் அளிக்கிறார். இதற்கும் ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தான் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராத ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான மனுவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அப்போது உச்சநீதிமன்றம் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது. ஒருமுறை மசோதா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் 2வது முறையாக நிறைவேற்றி கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். சட்டசபையின் நடவடிக்கைகளை ஆளுநர் முடக்கிவைக்க முடியாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதல்வரும், ஆளுநரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது பாராட்டுதலுக்குரியதாக இருக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணியின் காரணமாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்கவில்லை. வெள்ள நிவாரண பணிகள் முடிந்த பிறகு சந்திப்பதாக முதல்வர் ஸ்டாலின் தரப்பில் ஆளுநர் மாளிகைக்கு செய்தி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தான் இன்று மாலை 5.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேசினார். ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை ஆர்என் ரவி வரவேற்றார். அதன்பிறகு அவர்கள் 10 நிலுவை மசோதாக்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ள நிலையில் இருவரின் சந்திப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.மேலும் வரும் ஜனவரி மாதம் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுவாக ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பது ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்என் ரவி தமிழக அரசு வழங்கிய உரை புத்தகத்தில் இருந்த திராவிடம், பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை படிக்காமல் விட்டார். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் சட்டசபை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் இந்த முறை தமிழக அரசு சட்டசபையின் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குமா? இல்லையா? என்ற கேள்வி உள்ளது.
இத்தகைய சூழலில் இன்றைய சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில் சுமூகமாக முடியும் பட்சத்தில் அடுத்தக்கட்டமாக தமிழக சட்டசபையில் உரையாற்ற ஆளுநர் ஆர்என் ரவிக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கும் பணி என்பது தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications