டிடிவி தினகரன் ஓவர்.. "நிழலை" வைத்து வேகமாக காய் நகர்த்தும் ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?
சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பில் டிடிவி தினகரனை சந்தித்துள்ள நிலையில், அவரின் அடுக்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கும் சூழலில், கடந்த 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியதோடு, அவர்கள் வகித்து வந்த பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.
ஆனால் மறுபக்கம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். தற்போது இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் இருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரிய ஆர்ப்பாட்டமின்றி இருக்கிறது.

டெல்லி மேலிடம்
ஆனால் ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழு முதல் அதிமுக தலைமை அலுவலகம் வரை பல்வேறு விவகாரங்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. அதனால் அடுத்தடுத்த சந்திப்புகள், ஆலோசனைகள் என ஓபிஎஸ் தரப்பு பரபரப்பாக இயங்கி வருகிறது. குறிப்பாக டெல்லி மேலிடத்தின் ஆதரவை பெறுவதில் ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகிறார். இதற்காக அண்மையில் பாஜகவின் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட சில நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.

சையது கான் விவகாரம்
அதேபோல் நேற்று தேனி சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளரான சையது கான் சந்தித்து உற்சாக வரவேற்பளித்தார். இதனைத்தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பின் சொந்த ஊர் சென்ற ஓ.பன்னீர் செல்வத்தை, சையது கான் வரவேற்றார். இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் டிடிவி தினகரன் - ஓபிஎஸ் விரைவில் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் மீது அனுதாபம்
அதேபோல் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுப்பயணம், மாவட்ட செயல் வீரர்கள் கூட்டன் என அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சசிகலா தரப்பில் அதிமுக கட்சியை ஒன்றாக இணைக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று பேசி வருகிறார். ஆனால் டிடிவி தினகரன், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் நிலைப்பாடு எடுத்துள்ளார்.
Recommended Video

விரைவில் சந்திப்பு
இந்த சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்தரநாத், இதுவரை ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு நடக்கவில்லை. ஆனால் இனிமேல் சந்திப்பார்களா என்று சொல்ல முடியாது. தொண்டர்கள் நினைப்பது நடக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications