நெருங்கும் உலகக்கோப்பை.. உருவாகும் 'நம்பர் 4' பேட்டர் பிரச்சனை.. சூர்யகுமார் சொதப்ப காரணம் என்ன?
சூர்யகுமார் யாதவ் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 117 ரன்களுக்கு சுருண்டுள்ளது இந்திய அணி. அதிகபட்சமாக விராட் கோலி 31 ரன்களும், அக்சர் படேல் 29* ரன்களும் எடுத்துள்ளனர்.
இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் வழக்கம் போல் இடதுகை பந்துவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்ததே காரணமாக உள்ளது.
அதில் மிக முக்கிய காரணம் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தது தான். எப்படி மிட்சல் ஸ்டார் பந்தில் முதல் ஒருநாள் போட்டியில் ஆட்டமிழந்தாரோ, அதேபோல் மீண்டும் ஆட்டமிழந்துள்ளார். கிட்டத்தட்ட ரசிகர்களுக்கு ஆக்ஷன் - ரீப்ளே பார்ப்பதை போலவே இருந்தது. உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில், மீண்டும் 4ஆம் நிலையில் ஆடும் பேட்ஸ்மேனை கண்டறியாமல் இருப்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் காயம்
என்னதான் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் ஜித்தனாக இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது சராசரியும் 25.47 மட்டுமே உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ள சூழலில், சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் பேட்டிங்
ஒருவேளை உலகக்கோப்பைத் தொடரின் போதும் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகினால், அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவையே இந்திய அணி நம்பியுள்ளது. ஆனால் உலகக்கோப்பைத் தொடரில் இடம்பிடிப்பதற்காக எந்த தாக்கத்தையும் சூர்யகுமார் யாதவ் இதுவரை ஏற்படுத்தவில்லை. அதேபோல் சூர்யகுமார் யாதவின் பிரச்சனைகள் எதிரணிகளுக்கு தெரிய தொடங்கியுள்ளது.

இடதுகை பந்துவீச்சாளர்கள்
ஸ்விங் பந்துகளுக்கும் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கும் எதிராக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தால், உடனடியாக பந்துவீச்சை எதிரணிகள் மாற்றி வருவது கண்கூடாக பார்க்க முடிகிறது. மிட்சல் ஸ்டார்க், ஷாஹீன் அப்ரிடி, போல்ட் போன்ற பந்துவீச்சாளர்களால் சூர்யகுமாரை யாதவை எளிதாக வீழ்த்த முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பைத் தொடர்
இதிலிருந்து சூர்யகுமார் யாதவ் பாடம் கற்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனென்றால் கடந்த உலகக்கோப்பைத் தொடரில் நான்காவது நிலையில் ஆடும் பேட்ஸ்மேன் யார் என்பதில் கடைசி வரை முடிவு எடுக்காததால், உலகக்கோப்பையை தவற காரணமாக அமைந்தது. தற்போது இந்திய மண்ணில் நடக்கும் உலகக்கோப்பையையும் இந்தியா வெல்லவில்லை என்றால், அது இந்திய கிரிக்கெட்டுக்கு பேரிடியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications