வேளாண் பட்ஜெட் 2023..தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்
தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனையடுத்து சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் எம்ஆர்கே பன்னீர் செல்வம்.
கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாத மக்களும் தங்களின் கருத்துக்களை உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. கடிதம் மூலமும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும், 9363440360 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் கருத்துகளை விவசாயிகள் கூறியிருந்தனர். இன்று வேளாண்துறை அமைச்சர் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்டில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவை நடவடிக்கைகளை நிறைவடையும். நாளை புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு என்பதால் சட்டசபைக்கு விடுமுறை. பட்ஜெட் மீது விவாதம் 23ஆம் தேதி மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இதில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
24ஆம் தேதி 2-ம் நாள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். 25, 26ஆம் தேதிகளில் சட்டசபைக்கு விடுமுறை. 27ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் மீண்டும் நடைபெறும். 28ஆம் தேதி பட்ஜெட் மீது உறுப்பினர்கள் பேசிய விவாதத்திற்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளிக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications