Ahmedabad Plane Crash: சேதம் அடையாத ஏர் இந்தியா வால்பகுதி.. Black Boxஐ மீட்க விரைந்த அதிகாரிகள்! ஏன் முக்கியம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ 171 விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உதவும் கருவியான 'பிளாக் பாக்ஸ்' எனப்படும் கருப்புப் பெட்டி மீது தற்போது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் என்ன நடந்தது என்பதை அறிய இது உதவும்.

கருப்புப் பெட்டி: விமான விபத்துக்கான தடயவியல் ஆய்வு

"பிளாக் பாக்ஸ்" என்பது விமானத்தில் உள்ள இரண்டு முக்கியமான பதிவு ரெக்கார்டுகளை கொண்டு இருக்கும். அவை காக்பிட் குரல் பதிவு (CVR) மற்றும் விமான தரவு பதிவு (FDR) ஆகும். இந்த இரண்டு கருவிகளும் விமானத்தின் கடைசி நேரத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பதிவு செய்கின்றன. விமானியின் கடைசி நேர உரையாடல்கள், காக்பிட் கொடுத்த அலார்ம்கள், விமானத்தின் வேகம், விமானம் இருந்த உயரம், விமான எஞ்சினில் இருந்த் தரவுகள், விமானத்தின் எஞ்சின் மற்றும் ஆட்டோ பைலட் கணினி செயல்திறன் போன்ற அனைத்து தகவல்களையும் இது உள்ளடக்கியது.

Ahmedabad Air India Plane Crash Technicians rushed to retrieve the Black Box to Unlock Clues from the Cockpit

பொதுவாக இந்த கருப்புப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் அமைந்திருக்கும். விபத்து ஏற்பட்டாலும், விமானத்தின் மற்ற பகுதிகளை விட வால் பகுதி தப்பிப் பிழைக்க அதிக வாய்ப்புள்ளது.

விபத்துக்கு உள்ளன இந்த ஏர் இந்தியா போயிங் விமானத்தின் வால் பகுதி சேதம் அடையவில்லை. வெளியான புகைப்படங்களில் வாழ் பகுதி முழுமையாக சேதம் அடையாமல் உள்ளதை காண முடிகிறது. இதனால் அதன் பிளாக் பாக்ஸ் எளிதாக மீட்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதன்பின் போயிங் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தத் தரவுகளை ஆராய்ந்து, விமானக் குழுவினர் இயந்திரக் கோளாறுகளைச் சந்தித்தனரா, அவசர அழைப்புகளை விடுத்தனரா அல்லது கணினி எச்சரிக்கைகளுக்குப் பதிலளித்தனரா என்பதைக் கண்டறிய உள்ளனர். வலுவான பாதுகாப்புப் பதிவைக் கொண்ட இந்த ஜெட் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆய்வு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. அதே நேரத்தில், ஜிஇ ஜென்எக்ஸ் இயந்திரங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழந்திருக்க வாய்ப்பில்லை என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். எரிபொருள் மாசுபாடு, மென்பொருள் அல்லது கணினி செயலிழப்பு அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம்.. பறவை கூட மோதி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையாளர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

ஏஐ 171 விமானத்தின் பின்புறப் பகுதி பெரும்பாலும் சேதமடையாமல் அப்படியே இருப்பதால், கருப்புப் பெட்டியை மீட்பது சாத்தியம் என்று நம்பப்படுகிறது. கருப்புப் பெட்டி கிடைத்தவுடன் விசாரணை நடக்கும். போயிங் சம்பந்தப்பட்ட மிக மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

விமானத்தின் விபரம்

போயிங் 787-8 டிரீம்லைனர் ரக விமானமான இதில், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். விபத்து குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில், அப்பகுதியில் இருந்து வெளியான காட்சிகளில் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது. விபத்துக்கு உள்ளன விமானம் ஏர் இந்தியா 171 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்கு மதியம் 1:10 மணிக்கு செல்லக்கூடிய விமானமாகும்.

விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய கருப்புப் பெட்டி பெரிதும் உதவும் என்று நம்பப்படுவதால், அதற்கான தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+