கொள்கையற்ற கூட்டம்.. அதிமுகவும் பாஜகவும் வேறு வேறு இல்லை.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னை: கொள்கை என்றால் எத்தனை கிலோ என்று கேட்கிற அளவிற்கு கொள்கையற்ற கூட்டம் தான் அதிமுக என்றும் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கிற பாஜகவும், அண்ணா பெயரில் கட்சி ஆரம்பித்து அதனை பாஜகவிடம் அடகு வைக்க நினைக்கிற அதிமுகவும் வேறு வேறு இல்லை என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சமூக வலைத்தள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டம் சென்னையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- மூதறிஞர் இராஜாஜியும், சிலம்புச்செல்வர் ம.பொ.சியும் ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்தனர். ஆனால் 1967இல் திமுகவை ஆதரித்தார் இராஜாஜி. இதேபோல் உதசூரியன் சின்னத்தில் மயிலாப்பூரில் போட்டியிட்டார் ம.பொ.சி.. அந்த தலைவர்களுக்கு எல்லாம் மாற்று கொள்கை இருந்தது.

ஆனால் இன்றைக்கு பாஜக, அதிமுக போன்ற வெகுஜன துரோகிகளுக்கு எதிராக நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம். பாசிசத்திற்கு எதிராக தற்போது நாம் போராடி வருகிறோம். எப்படியாவது, சாதியின் பேரால், மதத்தின் பேரால் நாட்டை பிளவுப்படுத்தி நாட்டை நாசம் செய்யக்கூடிய கூட்டத்திற்கு எதிராக நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம். பாஜகவின் காவியத்தன்மை நம் இயக்கத்துக்கு மட்டுமல்ல.. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல.. இந்தியாவுக்கே எதிரானது.
உள்ளே வெளியே ஆட்டம்: ஒட்டு மொத்த மனித குலத்திற்கு எதிரானது. இப்படிப்பட்ட பாசிசவாதிகள் ஒருபக்கம். இவர்களுடைய பாதம் தாங்குகின்ற அடிமை அதிமுக மறுபக்கம். கொள்கை என்றால் எத்தனை கிலோ என்று கேட்கிற அளவிற்கு கொள்கையற்ற கூட்டம் தான் அதிமுக. இனிமேலும் பாஜகவுடன் இருந்தால் மக்கள் நம்மளை ஏற்கமாட்டார்கள், புறக்கணிக்கப்படுவோம் என பயந்து வெளியே வந்திருக்கிறார்கள். இப்போதும் கூட உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை அழிக்க நினைக்கிற பாஜகவும், அண்ணா பெயரில் கட்சி ஆரம்பித்து அதனை பாஜகவிடம் அடகு வைக்க நினைக்கிற அதிமுகவும் வேறு வேறு இல்லை. நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள். இருவரும் அப்படித்தான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். முன்னதாக அவர் கூறுகயில், "நான் உங்களுடைய பாலோயர்.. பார்க்காமலே நண்பர்களாக இருக்கிறோம். அந்த நட்புணர்வோடு தான் நான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
ஃபையர் வாள்: இந்த சந்திப்பில் நான் சேர் செய்கின்ற செய்திகளை சேர் செய்வீர்கள் என்று நினைக்கிறேன். லைக் செய்தால் மட்டும் போதாது. சேரும் செய்ய வேண்டும். கரை வேட்டி கட்டியவர்கள், கட்டாதவர்கள் என திமுகவினரை கலைஞர் அவர்கள் இரு வகைகளாக சொல்வார். சிலர் நேரடி அரசியலில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழகத்தின் மீட்சிக்காக உருவான இயக்கம் திமுக தான் என உரக்க சொல்வார்கள்..
கரை வேட்டி கட்டியவர்கள் சிங்கிள் டீ குடித்துவிட்டு வேலையை பார்ப்பார்கள் என்றால், கரை வேட்டி கட்டாதவர்கள் வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க கிளம்பிவிடுவார்கள். இந்த பாரம்பரியத்தின் அப்டேட் மட்டும் தான் நீங்கள்.. கட்சிக்கு அரணாக இருக்கிற கரை வேட்டி கட்டியவர்கள் போர் வாள்.. இணையத்தில் இயக்கத்திற்காக போராடுகிற நீங்கள் ஃபையர் வாள்..
நோய்க்கிருமிகள் ஒழிந்துவிடுமா?: கழகத்தின் முடிவுகள், செயல்பாடுகள் எல்லாத்தையும் ஒருசிலர் விமர்சித்து எழுதுகிறீர்கள். கலைஞர் ஒருமுறை சொன்னார், நான் பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன் என்று, அதன்படி நான் பொறுமையாக நடந்துகொண்டு பக்குவப்படுத்திக்கொண்டேன். இதனால் தான் நான் பாராட்டுக்களை போல விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். இதனால் இது இன்னும் என்னை பக்குவப்படுத்தும். நம்முடைய இயக்கம் பேசி பேசி எழுதி எழுதி வளர்ந்த இயக்கம்.
மொழி உணர்வை ஊட்டக்கூடிய வகையில் நமது பேச்சு இருந்தது. இப்போதும் இருந்துகொண்டு இருக்கிறது. சமூக வலைத்தளம் மூலம் மக்களின் கருத்துக்களை உடனடியாக தெரிந்துகொள்ள முடியும். எல்லா காலத்திலும் குறை சொல்பவர்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள். மருந்து கண்டுபிடித்துவிட்டால் மட்டும் நோய்க்கிருமிகள் ஒழிந்துவிடுமா?..
ஆன்மீகத்திற்கு எதிரி கிடையாது: தமிழர்களை தலை நிமிர வைக்க பிறந்த இயக்கம் தான் திராவிட இயக்கம். யாருடைய தலையையும் எடுக்க பிறந்தது அல்ல. என் மனைவி கோவிலுக்கு போவது, அவரின் விருப்பம். என் மனைவி எந்த கோவிலுக்கு செல்கிறார் என்பதை பார்த்துக்கொண்டு இருப்பது தான் பாஜகவின் வேலை. கோவில்களை இடித்ததாகவும் வதந்திகள் பரப்புகின்றனர். திமுக எப்போதும் ஆதிக்கத்திற்கு தான் எதிரியே தவிர.. ஆன்மீகத்திற்கு திமுக எதிரி கிடையாது.
திமுக ஆட்சியில் கோவில்கள் இடிக்கப்பட்டதாக வதந்திகள் பரவுகின்றன. வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளம் மூலம் வதந்திகள் பரப்பபடுகின்றன. 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். கோவில் சொத்துக்களையும் தொடர்ந்து மீட்டு வருகிறோம். அதிமுகவும் பாஜகவும் வேறு வேறு இல்லை. அந்த கட்சிகள் கொள்கையில்லா கட்சிகள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்!












Click it and Unblock the Notifications