எங்கேயுமே பாஜகவை காணோமே.. அதிமுகவும் மேலே வரல.. சொல்லி அடித்த கூட்டணி கட்சிகள் தேமுதிக, பாமக! சபாஷ்
சென்னை: அதிமுக, பாஜக பிரதான தலைமைகளைவிட, இவைகளுடன் கூட்டணி வைத்த கட்சிகளே அதிக வாக்குகளை பெற்றிருப்பது வியப்பை தந்து வருகிறது.
இந்த முறை லோக்சபா தேர்தலில், திமுக அமோக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டாலும், பாஜக, அதிமுக கட்சிகள் எத்தனை இடத்தில் வெல்லப்போகின்றன என்ற ஆர்வம் எகிறியபடியே இருக்கிறது.

எக்ஸிட்போல்: காரணம், வெளியான அத்தனை எக்ஸிட் போல் கருத்து கணிப்புகளிலுமே, அதிமுக பெரும் பின்னடைவையே சந்திக்கும் என்று கணிக்கப்பட்டது.. அதாவது, அதிமுகவுக்கு அதிகபட்சம் 8 இடங்கள், குறைந்த பட்சம் 2 தொகுதிதான் கிடைக்கும், குறிப்பாக, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு சாதகமான களமாக சொல்லப்பட்டது.
இதற்கு காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலை போலவே இந்த முறையும், அதிமுகவின் கூட்டணி மிகவும் பலவீனமாக உள்ளதுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறினார்கள். எடப்பாடி பழனிசாமி, பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தேமுதிக போன்ற கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி வைத்திருப்பதால், அதிமுக மிகப்பெரிய சறுக்கலை சந்திக்கும் என்றும் கூறினார்கள்.
தூத்துக்குடி: ஆனால், இப்போது நிலைமையே தலைகீழாகி வருகிறது.. அதிமுகவில் கூட்டணி வைத்த தேமுதிகதான் தற்சமயம் டாப்பில் உள்ளது. அதாவது, ஸ்ரீபெரும்புதூர், தென்சென்னை, வடசென்னை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி என அத்தனை தொகுதியிலும் பின்னடைவை அதிமுக சந்தித்துள்ளது..
அதேபோல, இந்த முறை தனித்தே தேர்தலை சந்தித்துள்ளது தமிழக பாஜக.. ஆனால், வடமாவட்டத்தில் பாமகவுக்கு இருக்கும் செல்வாக்கையே பிரதானமாக நம்பி, பாமக என்ற மிகப்பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்தது.. அத்துடன், 10 இடங்களில் தாமரை கண்டிப்பாக வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்து வந்தது.
முன்னிலை: ஆனால், பாஜக எங்குமே முன்னிலை வகிக்கவில்லை. பாஜகவின் கூட்டணி கட்சியான பாமகவை சேர்ந்த தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி மட்டுமே வெற்றியை தக்க வைப்பார் போல தெரிகிறது.. அதேபோல, அதிமுக கூட்டணி விருதுநகரில் தேமுதிக கூட்டணியில் விஜய பிரபாகரன் பிரதான வாக்குகளை பெற்று வருகிறார்..
இவைகளை தவிர்த்து தமிழ்நாட்டின் வேறு எந்த தொகுதியிலும் பாஜகவும், பாஜக கூட்டணியும் முன்னிலை வகிக்கவில்ல என்பது அதிர்ச்சியை தந்து வருகிறது. தென்மாநிலங்களில்கூட வெல்வோம் என்று பாஜக சொல்லிவந்த நிலையில், நட்சத்திர வேட்பாளர்கள்கூட வெற்றி பெறவில்லை என்பது அடுத்த அதிர்ச்சியாக உள்ளது.
நயினார் தொகுதி: அதேபோல் நெல்லையில் நயினார் நாகேந்திரன், கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சவுந்தர்ராஜன், நீலகிரியில் எல்.முருகன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
அதாவது, சென்னை தெற்கு, மத்திய சென்னை, வேலூர், நீலகிரி, கோவை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுச்சேரி, திருநெல்வேலி தொகுதிகளில் அதிமுகவை முந்திக்கொண்டு 2வது இடத்தில் பாஜக உள்ளது வியப்பை தந்துள்ளது. இத்தனைக்கும் தனிநபராகவே எடப்பாடி பழனிசாமி போராடினாலும், ஊர் ஊராக சென்று கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டாலும், அதிமுகவை பாஜக முந்தியிருப்பது, விநோதமான திருப்பத்தை இந்த தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தி வருகிறது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications