பகிரங்கமாக சொல்லுங்க.. டெல்லி கேட்ட ஒரு கேள்வி! "கூட்டணி தொடரும்".. அறிவித்த எடப்பாடி! என்ன நடந்தது?
சென்னை: பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக எடப்பாடி கூறினார். எடப்பாடியின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான காரணம் ஒன்று இருப்பதாக அதிமுக மாஜி அமைச்சர்கள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று திருநெல்வேலியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எடப்பாடி, அதிமுகதான் இந்த இடைத்தேர்தலில் வெல்ல போகிறது. மக்களுக்கு அதிகம் செய்தது நாங்கள்தான். திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு ஏமாற்றம் கொடுக்கும். இன்றைய சூழ்நிலையில் அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது. யாரை நம்பியும் அதிமுக இல்லை. அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது என்று கூறினார்.
மேலும் அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி முடிவு
அதாவது பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக எடப்பாடி கூறினார். எடப்பாடியின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறதாம். டெல்லியிலிருந்து எடப்பாடியிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று அவரை அதிர்ச்சியடடைய வைத்திருக்கிறது. இதனையடுத்தே, ''நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும்''என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கூடாது என அதிமுகவின் 90 சதவீத நிர்வாகிகள் எடப்பாடியை வலியுறுத்தி வந்தனர். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சிலர் மட்டுமே பாஜக உறவு வேண்டும் என்கிற மனநிலையில் இருப்பவர்கள். எடப்பாடியோ, பாஜக தேவையில்லை, பாஜகவுடன் கூட்டணி தேவையில்லை என்கிற நிலைப்பாட்டில் அழுத்தமாக இருந்து வந்தார்.

ஒற்றை தலைமை
இருப்பினும், அதிமுகவை தனது ஒற்றை தலைமையில் கைப்பற்றும் வரை பாஜகவின் உதவியை பெறுவதற்காக பாஜகவுடன் உறவாகவும் இருந்து வருவது அவரது திட்டமாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் தொகுதியில் கணிசமாக இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளை கவர வேண்டுமானால், பாஜகவுடன் உறவுபாராட்டக்கூடாது என மாஜிக்கள் பலரும் எடப்பாடியிடம் சொல்லியிருந்தனர். அதற்கேற்ப செங்கோட்டையனுக்கும் சில இன்ஸ்ட்ரக்சன்களை கொடுத்திருந்தார் எடப்பாடி. அதன்படி, தேர்தல் பணிகளில ஈடுபட்டுள்ள அதிமுக நிர்வாகிகளிடம், ''வாக்கு சேகரிக்கும் போதும், தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைகளின் போதும் பாஜகவினரை அழைக்காதீர்கள்.

பாஜக கொடி
பாஜக கொடியையும் பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது''என செங்கோட்டையன் உத்தரவிட்டிருந்தார். இதனால் பாஜக தலைவர்கள் படத்தை கூட கூட்டணி பணிமனையில் தவிர்த்தனர். தங்களுக்கும் பாஜகவிற்கு இடையே இடைவெளி இருப்பதாக காட்டிக்கொள்ளவே எடப்பாடி இப்படி பிளான் போட்டதாக கூறப்படுகிறது. இந்த விசயம், தமிழக பாஜகவினருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அதேபோல எடப்பாடியும், 'மற்ற கட்சிகளை வளர்க்கவா நாங்கள் கட்சி நடத்துகிறோம் ?'என பாஜகவை மறைமுகமாகத் தாக்கினார். இந்த விவகாரமும் பாஜகவினரை அப்-செட்டாக்கியது. டெல்லியின் உதவி இல்லாமல் இரட்டை இலை எடப்பாடிக்கு கிடைத்திருக்குமா? ஓபிஎஸ்சும் தினகரனும் தனது வேட்பாளரை வாபஸ் வாங்கியிருப்பார்களா? என்றெல்லாம் தமிழ்நாடு பாஜகவினர் கொந்தளிப்புக் காட்டினர்.

அணுகுமுறை
இந்த நிலையில், எடப்பாடி மற்றும் அதிமுகவினரின் இத்தகைய அணுகுமுறைகளை பாஜகவின் தேசிய தலைமையின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறது தமிழ்நாடு பாஜக தரப்பு. இதனையடுத்து, எடப்பாடிக்காக தங்களிடம் பரிந்து பேசும், தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஆளுநர் ஒருவரை தொடர்பு கொண்டு, பாஜக உறவு வேண்டாமெனில் இப்போதே பகிரங்கமாக எடப்பாடி பழனிச்சாமியை அறிவிக்கச் செய்யச் சொல்லுங்கள். மாறாக, தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜகவை அழைக்காதீர்கள்.

உறவு இல்லை
அவர்களுக்கும் நமக்கும் உறவு இல்லை என்றெல்லாம் இடைத்தேர்தலை மையப்படுத்தி சொல்லி பாஜகவை சீண்டுவதை எடப்பாடி நிறுத்திக் கொள்ளட்டும். பாஜக உறவு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மட்டும் கேட்டுச் சொல்லுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த கேள்வியைத்தான் எடப்பாடியிடம் அவர் கேட்டிருக்கிறார். அதில் அதிர்ச்சியடைந்த அவர், பொதுக்குழு தேர்தலில் தீர்ப்பு வரும்வரை அடக்கியே வாசிப்போம் என்று முடிவு எடுத்தாராம். இதையடுத்தே நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்தார் எடப்பாடி என்று சொல்கிறது அதிமுக மாஜிக்கள் தரப்பு. ஆனால் டெல்லி மீதுள்ள இந்த பயம் , எடப்பாடிக்கு எத்தனை நாளைக்கோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications