Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடுக்குது தன்மானம்.. ஓபிஎஸ்க்கு ஓகே சொன்ன எடப்பாடி! இருந்தாலும் ஒரு சிக்கல்! மா.செ. கூட்டம் எதற்காக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருட கடைசியான டிசம்பர் 31ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் இந்தக் கூட்டத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தான தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. அதிமுக பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்க சம்மதித்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, இது தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தவே இந்த கூட்டத்தை கூட்டி இருப்பதாக சொல்கின்றனர்.

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியாகப் போட்டியிடும் என்று அதிமுக ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த கூட்டணியில், அதிமுகதான் தலைமை வகிக்கும் என்றும், எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்றும் அந்தக் கட்சி தெளிவாகக் கூறியுள்ளது. மேலும், கூட்டணியில் சேர்க்கப்பட வேண்டிய பிற கட்சிகளைத் தேர்வு செய்வதற்கான அதிகாரமும் அதிமுகவுக்கே இருக்கும் என அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Edappadi Palaniswami AIADMK TTV Dhinakaran

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையில், அண்மையில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தார். அப்போது அவர், எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்தச் சந்திப்பில், அதிமுக-பாஜக கூட்டணியில் தொகுதிகள் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என்ற விவகாரம் குறித்து பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதிமுக கூட்டம்

இந்தக் கூட்டம் கட்சியின் தலைமைக் கழகமான இராயப்பேட்டை எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10 மணிக்கு தொடங்கும். இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகளும், கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு, மேலும் கூட்டணியில் சேர்க்கப்படும் கட்சிகள் குறித்த விவாதங்களும் நடைபெறும் என்று கட்சித் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும், அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள்

இந்த அறிவிப்பு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக ஏற்கெனவே அமைப்பு ரீதியான பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறது. மாவட்ட மட்ட நிர்வாகிகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்துவதன் மூலம், தேர்தல் பணிகளை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் தினகரன்

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வென்றாக வேண்டும் என்றால் அதிமுக பாஜக கூட்டணியை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அதிமுகவுக்கு தென் மாவட்டம், டெல்டா மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக இருந்த நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் பிரிந்து சென்றதால் அந்த வாக்கு வங்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் தேர்தலில் இவர்களை கூட்டணிக்கு அழைத்து வரவேண்டும் என பாஜக விரும்புகிறது.

கூட்டணி ஆலோசனை

எடப்பாடி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும் பாஜகவின் அழுத்தத்தால் அதற்கு அரைமனதாக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இருவரும் கூட்டணிக்குள் வந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? கூட்டணிக்குள் அவர்களை இணைத்துக் கொள்ளலாமா? என்பது குறித்து ஆலோசிப்பதற்காகவே எடப்பாடி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருப்பதாக சொல்கின்றனர் அதிமுகவினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+