''அந்தாளு "**த்தனமா உளறுகிறார்''! அண்ணாமலை மீது அதிமுக ஆதிராஜா ராம் ஆவேச தாக்கு
சென்னை: அந்தாளு லூசுத்தனமாக உளறுகிறார் எனக் கூறி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பங்கம் செய்திருக்கிறார் அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜா ராம்.
மறைந்த ஜெயலலிதாவை ஊழல்வாதி எனக் குறிப்பிடும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது அதிமுக -பாஜக கூட்டணியில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் சூசகமான விமர்சனத்துக்கு அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் எம்.ஜி.ஆர். காலத்து சீனியரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ஆதிராஜா ராம், அண்ணாமலையை கடுமையாக வறுத்தெடுத்து விட்டார். அண்ணாமலையை ''அந்தாளு இந்தாளு'' என்றும் ''பைத்தியக்காரன் பத்தும் பேசுவான்'' எனவும் சாடியிருக்கிறார். அண்ணாமலையை பொறுத்தவரை தமிழக பாஜகவின் மேனேஜர் என்றும் ஓனரை பேசச்சொல்லுங்க எனவும் ஆதிராஜா ராம் பாய்ந்தார்.
எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்காகவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததாகவும் அதில் கூட்டணி குறித்தோ, சமரசம் பற்றியோ எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.
எடியூரப்பா எதற்கு ஜெயிலுக்கு போனார் என்றும், பங்காருலட்சுமணன் பதவி எதற்கு பறிக்கப்பட்டது என்பது குறித்தெல்லாம் அண்ணாமலை பேச வேண்டும் என ஆதிராஜா ராம் ஆவேசம் காட்டினார். தாங்கள் ஒன்று தொடை நடுங்கிக் கொண்டு நிற்கவில்லை எனவும் தனக்கே உரிய பாணியில் பாஜகவை விளாசினார்.
அண்ணாமலை பேச்சு பைத்திக்காரத்தனமாக இருப்பதாக விமர்சித்த ஆதிராஜா ராம், கூட்டணி குறித்து பாஜக தேசியத் தலைமையை பேசச் சொல்லுங்க என பிரஸ்மீட் வாயிலாக ஓபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications