ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்! சல்லி சல்லியாக நொறுக்கிய பிரேமலதா! அப்போ அதிமுக கூட்டணி?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவைக் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். நேற்று ஜிகே மூப்பனாரின் நினைவு தின நிகழ்ச்சியில் எடப்பாடியுடன் எல்.கே.சுதீஷும் கலந்துகொண்ட நிலையில், கூட்டணி சுமூகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியிருப்பது கூட்டணி அமையுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் எடப்பாடி, ஸ்டாலின் என இரு தலைவர்களுக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தன் மீதான தொடர் தோல்வி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறார்.
இரண்டாவதாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இதுவரை அடுத்தடுத்து இருமுறை திமுக ஆட்சி அமைத்ததில்லை என்ற குறையைப் போக்கத் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

தமிழக அரசியல்
தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகள் இல்லாமல் பிரதான கட்சிகளான அதிமுக - திமுக வெற்றி பெற முடியாது என்ற சூழல் நிலவுகிறது. திமுகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் கூட்டணி மிக வலுவானதாக இருக்கிறது. 2019 தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி உருவான நிலையில் அதில் இருந்த கட்சிகள் தற்போது வரை தொடர்கின்றன. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் சில அமைப்புகள் திமுக கூட்டணிக்கு பக்கபலமாக இருக்கின்றன.
அதிமுகவில் கூட்டணி
மறுபுறம் அதிமுகவில் கூட்டணி வலுவானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பாஜக அதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைந்திருக்கும் நிலையில், பாஜகவோடு கடந்த காலங்களில் கூட்டணி அமைத்திருந்த ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஜான்பாண்டியனின் மக்கள் முன்னேற்றக் கழகம், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் சேரலாம் எனக் கூறப்படுகிறது. பாமகவும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் எனச் சொல்லப்படுகிறது.
தேமுதிக அரசியல்
இந்த நிலையில் தேமுதிகவைக் கூட்டணிக்குக் கொண்டு வர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு நடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் எம்பி சீட்டைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியில் இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் கிட்டத்தட்ட அதிமுக கூட்டணியை விட்டு விலகி விட்டதாகவே சொல்லப்படுகிறது.
எல்.கே.சுதீஷ்
மேலும் திமுகவுடன் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது பிரேமலதாவின் பேச்சு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிகே மூப்பனாரின் நினைவு தின நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார். குறிப்பாக தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது கவனிக்கத்தக்கது. இதனால் அதிமுக பாஜக தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே கூறப்பட்டது.
பிரேமலதா பேச்சு
ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தினார் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக பூத் கமிட்டி ஏஜென்ட் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய பிரேமலதா எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டார், மாநிலங்களவை சீட்டு தருவதாக கடிதமும் கொடுத்தார். ஆனால் அரசியல் நாகரிகம் கருதி அந்தக் கடிதத்தை தாங்கள் வெளியிடவில்லை எனப் பேசியிருந்தார் பிரேமலதா. இந்தப் பேச்சு தேமுதிக, அதிமுக மற்றும் பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கூட்டணி சிக்கல்
2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கலாம் எனத் திட்டமிட்டிருந்த பாஜக அதிமுக தலைவர்கள் பிரேமலதாவின் பேச்சால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே திமுகவுடன் தேமுதிக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், எல்.கே.சுதீஷை அனுப்பியது இருதரப்பிலும் பேரம் பேசுவதற்காகத்தான் எனவும் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் தேமுதிக இதேபோல் தான் அதிமுக திமுக எனக் கடைசி நேரம் வரை பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர்












Click it and Unblock the Notifications