அதிமுக மறுபடியும் சொதப்பி விட்டதே! எதிர்கட்சிக்கு சின்ன கேப் கூட கொடுக்காத ஸ்டாலின்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைஞர் அஜித் குமார் மரண விவகாரத்தில் அடுத்தடுத்து முக்கிய நடவடிக்கைகள் எடுத்து எதிர்க்கட்சிகள் அதில் பெரிய அளவில் போராட்டங்களை செய்ய முடியாமல் திமுக தரப்பு கிட்டத்தட்ட தடுத்துவிட்டது. ஆனால் கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் இருக்கும் அதிமுக இதில் வெறும் அறிக்கைகள் புகைப்படங்களுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டு விட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் மரண வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் செய்தனர். தொடர்ந்து நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதன் அடிப்படையில் 5 போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது

palanisamy Sivagangai

தமிழக அரசின் வேகமான நடவடிக்கைகள்

இளைஞர் அஜித் குமார் மரணம் பெரிதானதும் தமிழ்நாடு அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனே எடுத்தது

1. பிரேத பரிசோதனை அறிக்கை துரிதப்படுத்தப்பட்டது.

2. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதன் அடிப்படையில் 5 போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது

3. உடனே 5 காவலாளிகளை கைது செய்தனர்.

4. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

5. மதுரை உயர் நீதிமன்ற கிளை விசாரணை சரியாக நடக்குமா என்ற ஐயம் எழுப்பிய உடன் கோர்ட்டிலேயே அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற ஆட்சேபனை கிடையாது என்று தமிழக அரசு வாதம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வைத்துள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு அதிகாரபூர்வ நிலைப்பாடு எடுத்துள்ளது. சிபிஐக்கு மாற்ற ஆட்சேபனை கிடையாது என என்ஓசி தாக்கல் செய்ய கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

6. அடுத்த சில மணி நேரங்களில் வழக்கு உடனே சிபிஐக்கு மாற்றப்பட்டது.

7. அதேபோல் அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் பாதிக்கப்பட்ட அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

8. அப்போது முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அஜித் குமார் தாய் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதுதொடர்பாக அஜித் குமார் தாய் பேசுகையில், என் பையனுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் கொலை செய்துவிட்டார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு 28 ஆண்டுகள் வளர்த்து பறிகொடுத்துவிட்டோம். இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு ஸ்டாலின், ரொம்ப வருத்தமா இருக்கு.. மன்னித்துவிடுங்கள்.. மனதை தேற்றிக் கொள்ளுங்க.. கவலையாக இருக்கு.. தப்பு நடந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்ததாக கூறினார். பொதுவாக முதல்வர்கள் மன்னிப்பு கேட்பது அரிதான விஷயம்.. அது இங்கே நடந்துள்ளது.

சொதப்பிய அதிமுக?

இளைஞர் அஜித் குமார் மரண விவகாரத்தில் அடுத்தடுத்து முக்கிய நடவடிக்கைகள் எடுத்து எதிர்க்கட்சிகள் அதில் பெரிய அளவில் போராட்டங்களை செய்ய முடியாமல் திமுக தரப்பு கிட்டத்தட்ட தடுத்துவிட்டது. ஆனால் கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் இருக்கும் அதிமுக இதில் வெறும் அறிக்கைகள் புகைப்படங்களுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டு விட்டது.

1. அதிமுக இதில் பெரிய அளவில் போராட்டங்களை செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி இதில் அறிக்கைகள் வெளியிட்டதோடு நிறுத்திவிட்டார்.. குறைந்தபட்சம் ஒரு வீடியோ போட்டு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.

2. ஆளும் தரப்பே அமைச்சர்களை அனுப்பி பாதிக்கப்பட்டவர்களை தேற்றும் வேளையில், எதிர்க்கட்சி அதே மண்டலத்தில் உள்ள ஒரு எம்எல்ஏவை தவிர வேறு யாரையும், மாஜி அமைச்சரையும் கூட அதிமுக அனுப்பவில்லை.

3. சாத்தான்குளம் சம்பவம் நடந்த போது அதற்கு மறுநாளே அப்போதைய எதிர்க்கட்சியான திமுக உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்தது. ஆனால் இப்போது அதிமுக அப்படி எதுவும் செய்யவில்லை.

4. வெறும் அறிக்கைகளோடு, புகைப்பட கண்டனங்களோடு அதிமுக நின்றிவிட்டது.

5. எதிர்க்கட்சிகளுக்கு திமுக தரப்பு பெரிய வாய்ப்பு கொடுக்காமல் இதில் துரித நடவடிக்கை எடுத்த நிலையில்.. இருக்கிற இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் பக்கம் நிற்கும் வாய்ப்பை எடப்பாடி இந்த முறை தவறவிட்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+