ஓபிஎஸ், டிடிவியை சேர்க்க முடியாது.. பாஜகவுக்கு மறைமுக மெசேஜ்! எடப்பாடி போடும் பிளான் என்ன?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி. தினகரன், சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். அதற்காக கெடுவும் விதித்தார். இதனால் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வரும் சூழலில், பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்பதை திட்டவட்டமாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். ஓபிஎஸ் உள்ளிட்டோரை சேர்க்க முடியாது என்று எடப்பாடி அறிவித்தது என்? அவரது திட்டம் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, வரும் தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று பேசி வருகிறது. ஆனால் தற்போது வரை அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

வலுவான கூட்டணி அமையுமா?
பாஜக கொள்கை எதிரி என விஜய் அறிவித்துள்ளதால், அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. தேமுதிக இன்னும் பிடிகொடுக்க மறுத்து வருகிறது. பாமகவும் உள்கட்சி பூசலில் சிக்கி தவித்து வரும் நிலையில், வரும் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பதால் அதற்கான வியூகங்களை பாஜக வகுத்துவருகிறது.
இத்தகைய சூழலில்தான், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 5ஆம் தேதி மனம் திறந்து பேசுவதாக அறிவித்தார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், 10 நாட்களில் இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும் என்றும் கெடு விதித்தார்.
செங்கோட்டையன் கலக குரல்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் திடீரென கலக குரல் எழுப்பியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கெடு விதித்த சில தினங்களில் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவையும் நிர்மலா சீதாராமனையும் சந்தித்ததாக கூறினார். செங்கோட்டையனின் இந்தச் செயல் அதிமுக வட்டாரம் மட்டுமல்லாது, அரசியல் அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"செங்கோட்டையன் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மேலிடம் நெருக்கடி கொடுக்கிறதா?" என்ற பேச்சுக்களும் எழுந்தன. இந்த சூழலில்தான், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியது.
ஓபிஎஸ், டிடிவி தினகரனை சேர்க்க முடியாது..
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்திக்க எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்பட்டாலும், இந்த சந்திப்பின் போது அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. செங்கோட்டையன் சென்று வந்த ஓரிரு நாட்களில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
இத்தகைய சூழலில், அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை இணைக்க வாய்ப்பே இல்லை என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார். "கட்சியில் பிரிந்தவர்களை இணைக்கும் விவகாரத்தில் தனது நிலைப்பாடு இதுதான்" என்பதை இங்கிருந்தே பாஜக மேலிடத்திற்கு அனுப்பிய மெசேஜாக எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
கைகூலிகளுக்கு விரைவில் முடிவு
அதிமுக ஒருங்கிணைப்புக்காக குரல் கொடுத்த செங்கோட்டையனையும், எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். "சில பேரை கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுபிடித்துவிட்டோம்.
அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்," என எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது, தனக்கு எதிராக கட்சியில் குரல் கொடுப்பவர்களுக்கு எடப்பாடி விடுத்த எச்சரிக்கையாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications