‛சகோதரர் நடிகர் அஜித் பூரண நலம்பெற வேண்டும்’.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
சென்னை: நடிகர் அஜித்தின் சென்னை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுபற்றி அறிந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி சகோதரர் எனக்கூறி நடிகர் அஜித் பூரண நலம்பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். 'விடாமுயற்சி' என பெயரிடப்பட்ட திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு என்பது அஜர்பைஜானில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் நடிகர் அஜித் அடிக்கடி அஜர்பைஜானுக்கு சென்று திரும்பி வந்தார். வரும் 15ம் தேதி மீண்டும் அஜர்பைஜானில் சூட்டிங் உள்ளது. இதற்கு அஜித் தயாராகி வந்தார்.
இத்தகைய சூழலில் தான் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.
நடிகர் அஜித்துக்கு எந்த வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்பது பற்றி அவர் தரப்பில் இருந்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் தரப்படவில்லை. இதற்கிடையே தான் நடிகர் அஜித் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதோடு, விரைவில் அஜித் குணமாகி மீண்டும் வர வாழ்த்து தெரிவித்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் நடிகர் அஜித் மருத்துவ சிகிச்சையில் இருப்பதை அறிந்ததும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித்தை சகோதரர் எனக்கூறி அவர் வாழ்த்தி உள்ளார். இதுபற்றி எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம்பெற வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார். இந்த பதிவை அவர் #Ajithkumar எனும் ஹேஷ்டேக்கில் பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பதிவை பார்த்த அஜித் ரசிகர்கள் Thank You sir என கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications