உங்கள் லட்சணம் ஊருக்கே தெரியும்..திமுக பற்றி ஜெயக்குமார் போட்ட பளீர் ட்வீட்- விமர்சித்த நெட்டிசன்ஸ்
சென்னை: திமுக அரசின் செயல்பாடு குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்த ட்வீட் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் இதற்கு பதில் அளித்து வருகிறார்கள்.
Recommended Video
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின் முந்தைய அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பல திட்டங்கள் அதே பெயரில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அம்மா உணவகம் அதே பெயரில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கான இலவச பைகளில் முந்தைய ஆட்சியாளர்களின் புகைப்படங்களை நீக்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் இது போன்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்று இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு முந்தைய ஆட்சியில் வைத்த கல்வெட்டு ஒன்றை நீக்கிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்துள்ள ட்வீட்டில், முதல் படம் - அதிமுகவினர் செய்த வேலையை சொல்லும் கல்வெட்டு. 2-வது படம் - திமுகவினர் செய்த வேலை "கல்லை வெட்டு" திமுககாரங்களே கல்வெட்டை அகற்றுவதால் உங்கள் லட்சணம் தான் ஊருக்கு தெரியும் .. நாங்கள் என்ன செய்தோம் என்பதை நாடறியும்.. என்று குறிப்பிட்டு உள்ளார்.

என்ன கல்வெட்டு
தென்னக ரயில்வேவின் சுரங்கப்பாதை சென்னை பீச் ரோட்டில் கடந்த ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த சுரங்க பாதை அதிமுக ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டது. அப்ப்பதாய் அமைச்சர் ஜெயக்குமார் மூலம் இந்த பாதை திறந்து வைக்கப்பட்டது. இதில் இருந்த கல்வெட்டுதான் தற்போது சிமெண்ட் பூசி அகற்றப்பட்டுள்ளது. இதைத்தான் ஜெயக்குமார் புகைப்பட ஆதாரங்களோடு விமர்சனம் செய்துள்ளார்.

வைரல்
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்த ட்வீட் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் இதற்கு பதில் அளித்து வருகிறார்கள். சிலர் ஜெயக்குமார் ட்வீட்டிற்கு ஆதரவாகவும், சில எதிராகவும் பதில் அளித்துள்ளனர். நெட்டிசன் ஒருவர் அளித்துள்ள பதிலில் உங்களோட குட்டி டைலுக்கே இவ்ளோ சொல்றீங்க சார். 1999, கருணாநிதி கோயம்பேடு பேருந்து நிலையம் திறந்ததை, 2002 இல் நீங்க பேர் போட்டுடீங்களே அது சரியா? இத்துணூண்டு tile க்கு சிலேடை வசனம் சொல்றீங்க, ஒரு தமிழ் நடிகனின் சிலையை நடுராத்திரிலே தூக்கினீங்களே..உங்க ஆட்சி லட்சணம்?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

விமர்சனம்
இன்னொரு பக்கம் நெட்டிசன்கள் திமுகவின் செயலுக்கு எதிராக விமர்சனம் வைத்துள்ளனர். அதில், திமுக மக்களுக்காக எதையுமே செய்வதில்லை. அதிமுகவின் சாதனை கல்வெட்டுகளையும் திட்டங்களையும் மறைப்பதற்கு மட்டுமே ஆட்சி அமைத்து உள்ளதா? திமுக எப்போதுதான் மக்கள் பணியை தொடரும்?, என்று கேட்டு உள்ளனார். ஜெயக்குமாரின் இந்த ட்வீட் இணையத்தில் நெட்டிசன்களுக்கு இடையே காரசார விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தைக்கு உதவி செய்யுங்களேன்!
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications