உள்ளாட்சி தேர்தல்.. கைமாறும் முக்கிய அதிகாரம்.. சென்னையில் அதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை : உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்கள் . காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் உள்ள அதிமுக செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. . இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் அனைத்து தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவிட்டார்கள்.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

மேலும், வார்டுவரையறை செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்ட ஊரக பகுதி தேர்தலை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.

பாஜக கூட்டணி

பாஜக கூட்டணி

இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை, உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மேலிடத்தை வற்புறுத்தி வருகிறார்களாம். ஆனால் அதிமுக மேலிடமோ பாஜவை கூட்டணியில் கழட்டிவிட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது. அண்மையில் சிவி சண்முகம் பாஜகவால் தோற்றோம் என்று பேசிய போது, ஓபிஎஸ்,இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், பாஜக உடன் கூட்டடணி தொடரும் என்றே கூறினார்கள். எனவே பாஜவை அதிமுக கழட்டிவிட வாய்ப்பே இல்லை என்ற நிலையே உள்ளது.

9 மாவட்ட செயலாளர்கள்

9 மாவட்ட செயலாளர்கள்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

4 நாட்கள் ஆலோசனை

4 நாட்கள் ஆலோசனை

தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் உள்ள அதிமுக செயலாளர்களுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் தொடர்ந்து 4 நாட்கள் நடக்க உள்ளதாம். , ஒவ்வொரு நாளும் 9 மாவட்ட அதிமுக செயலாளர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்க போகிறார்களாம்.

கூட்டணி மற்றும் இடங்கள்

கூட்டணி மற்றும் இடங்கள்

இந்த கூட்டத்தில், வருகிற உள்ளாட்சி தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும், கூட்டணிகட்சிகளுக்கான இடங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த அதிமுக மாவட்ட செயலாளர்களே தேர்தல் கூட்டணி மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க அதிகாரம் வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஒரு கட்சியின் ஆணிவேரை பலப்படுத்துவது என்பது உள்ளாட்சி தேர்தலில் பெறும் வெற்றி தான் தீர்மானிக்கும். எனவே இதில் அதிமுக நிச்சயமாக உஷாராகவே இருக்கும் என்று தெரிகிறது. கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுக்கவும் நிச்சயம் தயாராக இருக்காது என்றே சொல்கிறார்கள். இந்த ஆலோசனை அதுபற்றியதாகவே இருக்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+