குருமூர்த்தி வாயை அடக்காவிட்டால் வாங்கி கட்டிக்கொள்வார்.. அதிமுக ஜெயக்குமார் வார்னிங்!
சென்னை: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேசுவதை குருமூர்த்தி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள ஜெயக்குமார், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவு கட்சி எடுத்தது என்றும் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் துக்ளக் இதழின் 55வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசுகையில், ஊழலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால் அதிமுக தேச விரோத கட்சி அல்ல. வரும் தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் இணைய வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு அரசியல் தலைவருக்கான போக்கு இல்லை. ஏற்கனவே ஒருமுறை கையில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். கடந்த தேர்தலில் கொஞ்சம் சமரசம் செய்து கொண்டு, பாஜகவுக்கு 10 அல்லது 12 சீட் கொடுத்திருந்தால், திமுகவுக்கு தனி பெரும்பான்மை கிடைத்திருக்காது.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரிடமும் இருந்த உறுதி, எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்று காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, கேக் வெட்டி சக நிர்வாகிகளுக்கு ஊட்டிவிட்டார்.
இதன்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், துக்ளக் குருமூர்த்தி ஏற்கனவே எங்களிடம் நிறைய வாங்கி கட்டிக்கிட்டார். மீண்டும் மீண்டும் வாங்கி கட்டிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக வேண்டாம் என்று தான் தவிர்த்து வருகிறோம். அதனால் வாயை அடக்கிக் கொண்டு, குருமூர்த்தி அவரின் வேலையை மட்டும் செய்தால் போதும்.
2026ல் அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என்ற முடிவு கட்சியால் எடுக்கப்பட்டுவிட்டது. வருங்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு கட்சி வந்துவிட்ட பிறகு, மீண்டும் குருமூர்த்தி பேச வேண்டிய அவசியம் கிடையாது. அதனால் அவர் வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து ஜெயக்குமார் பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியாயமாக நடக்குமா? இந்த இடைத்தேர்தலில் பணம் பாதாளம் வரை பாயும். தேர்தல் ஆணையம் இதனை கண்டு கொள்ளாது. அதிமுக எப்போதும் தேர்தலில் போட்டியிட அஞ்சுகிற இயக்கம் அல்ல. 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினின் பாட்சா பலிக்காது என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications