கரூருக்கு மகிழ்ச்சி.. திண்டுக்கல் குஷி.. எடப்பாடி பழனிசாமி ரெடியாயிட்டாரு.. பரபர சென்னை ராயப்பேட்டை
சென்னை: தேர்தல் நெருங்கி வரும்நிலையில், விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலை அதிமுக தொடங்கி உள்ளன.. அந்தவகையில், கட்சிக்குள் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.. எனவே, எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணலை துவங்கி உள்ளார்.

மெகா கூட்டணி : ஆனால், மெகா கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உருவாக்க போவதாக கூறி 2 வருட காலமாகியும், இதுவரை திணறி வருவதாகவே தெரிகிறது. இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், புதிய தமிழகம், எஸ்டிபிஐ, பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளன. தேமுதிக, பாமகவுடன் அதிமுக பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது.
மற்றொருபக்கம், அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு தாக்கல் கடந்த மார்ச் 1 ஆரம்பித்து நடந்து முடிந்தது. கடந்த 7ம் தேதியுடன் விருப்பமனு அளிக்கும் காலம் நிறைவடைந்த நிலையில், மொத்தமாக 2,475 பேர் விருப்ப மனுக்களை சமர்ப்பித்திருந்தனர்.
அறிவிப்பு: இதையடுத்து இவர்களுக்கான நேர்காணல் நேற்றும், இன்றும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்றைய தினம் காலை திருவள்ளூர், சென்னை, வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும், பிற்பகலில் திருவண்ணாமலை, ஆரணி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற்றது.
சேலத்தில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்.. திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினமும் நேர்காணல் நடத்துகிறார். அதன்படி, இன்று 11ம் தேதி பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், புதுச்சேரி உள்ளிட்ட 20 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம், காலை, மாலை நேர்காணல் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
விருப்பமனு: விருப்பமனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 20 தொகுதிகளுக்கு இன்று நேர்காணல் நடைபெறுவதால், அதிமுக தரப்பே படுபிஸியாக காணப்படுகிறது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications