அதிமுக சாதி கட்சியா? அழுத்தி சொன்ன சசிகலாவை படபடவென விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி
தஞ்சாவூர்: அதிமுக சாதி கட்சியாக மாறுவதாக சசிகலா குற்றம்சாட்டிய நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி முற்றிலுமாக மறுத்துள்ளார். அதோடு அந்த குற்றச்சாட்டை கூறிய சசிகலாவை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

சசிகலா கூறுகையில், ‛‛ அதிமுக என்பது குறிப்பிட்ட சாதி கட்சியாக மாறி வருகிறது. அதிமுக அழிவதாக யாரும் நினைக்க வேண்டாம். விரைவில் என்ட்ரி கொடுக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தான் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் நடந்த திருமண விழாவில் இன்று எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அதன்பிறகு தஞ்சாவூரில் உள்ள தனியார் ஓட்டலில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த வேளையில், ‛‛அதிமுக சாதிக்கட்சியாக மாறிவிட்டதாகவுகம், விரைவில் என்ட்ரி கொடுப்பதாகவும் சசிகலா கூறுகிறாரே?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛எந்த அடிப்படையில் அவர் சொல்கிறார் என்று நீங்கள் தான் கேட்க வேண்டும். அதிமுகவில் ஜெயலலிதா இருந்தபோது பதவி கொடுக்கப்பட்டவர்களுக்கு தான் இப்போதும் பதவி வழங்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் எல்லா சாதியினரும் உள்ளனர். இஸ்லாமியர் அவைத்தலைவராக உள்ளார். அதிமுக என்பது சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி.
ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் அப்படி சொல்கிறார். அதிமுகவில் யாரும் சாதி பார்ப்பது இல்லை. கட்சியை காப்பாற்றுவேன் என்று சசிகலா கூறுவது 3 ஆண்டுகள் வேலைக்கு செல்லாமல் திடீரென வேலைக்கு செல்வது போல் உள்ளது. 2021ல் அரசியல் ஓய்வு எனக்கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார்'' என பதில் கேள்வி எழுப்பினார்.
அடுத்ததாக, ‛‛அதிமுகவில் அடுத்தடுத்த சரிவுகளை சரிசெய்வதற்கான திட்டம் என்பது ஏதேனும் உள்ளதா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛எதை சரிவு என்று கூறுகிறீர்கள். தேர்தலில் தோல்வியடையாத கட்சி இருக்கிறதா? 1991ல் திமுகவுக்கு 2 எம்எல்ஏக்கள் தான் வந்தனர். 2014ல் ஒரு எம்பி கூட இல்லை. வெற்றி தோல்வி மாறி மாறி வரும். 2019ல் அதிமுக பலமான கூட்டணி அமைத்தது. அப்போது 19 சதவீத ஓட்டு கிடைத்தது. இப்போது கூட்டணி இல்லாமல் 20 சதவீத ஓட்டு கிடைத்துள்ளது. எங்களின் வளர்ச்சி ஒரு சதவீதம்'' என்றார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications