அதிமுகவில் 2 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி? வேண்டியவர்களுக்காக காய் நகர்த்தும் ஒபிஎஸ்-ஈபிஎஸ்
Recommended Video
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த 2 பேருக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரை அமைச்சராக்க ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் காய்நகர்த்தி வருகிறார்களாம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த மக்களவை தேர்தலில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் ஆட்சி அமைக்க உள்ளது.அதில் பாஜக மட்டுமே 303 இடங்களில் வென்று அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவை நாளை மறு நாள் அதாவது 30ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள், பாஜக தலைவர்கள், பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களும் பங்கேற்க உள்ளார்கள்.

கேபினட் அமைச்சர்கள்
பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்தவர்களே பல முக்கிய கேபினட் அமைச்சரவை பொறுப்புகளை ஏற்க உள்ளார்கள். குறிப்பாக அமித்ஷா, ஸ்மிருதி இராணி , நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நிதீஷ்குமார் கோரிக்கை
இதனிடையே சிவசேனா கட்சி 18எம்பிக்களை வைத்துள்ளது. எனவே இந்த முறை அந்த கட்சி தங்களுக்கு 3 முதல் 4 அமைச்சர்கள் வேண்டுமென் கேட்டுள்ளது. 17 இடங்களை பெற்றுள்ள நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கணிசமான அமைச்சர் பதவிகளை கேட்டுள்ளது.

ஒரு அமைச்சர்
இதேபோல் ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 6 எம்பிக்களும், சிரோமணிஅகாலி தளம் 2 எம்பிக்களையும் அப்னா தளம் கட்சி 2 எம்பிக்களையும் வைத்துக்கொண்டு ஒரு அமைச்சர் பதவியாவது எங்களுக்கு வேண்டும் என பாஜகவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

பாஜக மேலிடம் தகவல்
இந்நிலையில் தமிழ்நாட்டில் 38 இடங்களில் ஒரு இடத்தில் மட்டுமே அதிமுக வென்றுள்ளது. எனினும் அமைச்சரவையில் தமிழகத்துக்கு ஒரு இடம் கொடுக்க மோடி முடிவு செய்துள்ளாராம். யாரை அமைச்சராக்குவது என்பதை தெரிவிக்குமாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறியுள்ளார்களாம்.

ரவீந்திரநாத் அமைச்சர்
ஆனால் அதிமுக தரப்பில் 2 மத்திய அமைச்சர் பதவிகளை தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். தேனி தொகுதியில் வென்ற ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், தனது மகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இலாக்காவை பெறுவதற்கான காய் நகர்தல்களை மேற்கொண்டு வருகிறாராம்.

ஈபிஎஸ் காய்நகர்த்தல்
இதனிடையே அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வைத்திலிங்கத்துக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாம். தற்போது மேல் சபை எம்பியாக உள்ள வைத்திலிங்கத்துக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கித்தருவதற்கான காய் நகர்த்தல்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகிறராம்.

பாஜகவுக்கு நோ மெஜாரிட்டி
லோக்சபாவில் முழு மெஜாரிட்டி பெற்று பாஜகவுக்கு ராஜ்யசபாவில் மெஜாரிட்டி இல்லை. அடுத்த ஆண்டு இறுதியில் தான் முழு மெஜாரிட்டி கிடைக்கும். இதனால் ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்ற அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தேவை பாஜகவுக்கு உள்ளது. அதிமுகவுக்கு வரும் ஜுலையில் ராஜ்யசபாவில் 12 எம்பிக்கள் இருப்பார்கள். எனவே அதிமுகவுக்கு 2 மத்திய அமைச்சர்களை தருக்கூடும் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். இது நடக்குமா என்பது மே30ம் தேதி மாலை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications