அட ஓபிஆரா அப்படி சொன்னது.. நம்ப முடியலையே?.. சசிகலாவிடம் குண்டை தூக்கி போட்ட சுஜாதா.. உண்மையா?
சென்னை: சசிகலா தற்போது அதிமுக தொண்டர்களிடம் பேசுவதாக நிறைய ஆடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், நேற்று வெளியான ஆடியோ இன்று முக்கியமான சில கேள்விகளை எழுப்பி உள்ளது.
தமிழக அரசியலில் புதிய புயலாக சசிகலா ஆடியோ விவகாரம் உருவெடுத்து உள்ளது. அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் தினமும் வெளியாகி வைரலாகி வருகின்றன. கட்சியை மீட்பேன், விரைவில் கட்சிக்கு தலைமை ஏற்பேன் என்று வெளிப்படையாக சசிகலா சவால் விடுத்து வருகிறார்.
அதிமுகவை பழைய மாதிரி மீட்டு கொண்டு வருவேன். கொரோனா முடிந்ததும் அனைத்திற்கும் முடிவு கட்டுவேன் என்று சசிகலா ஒவ்வொரு போன் காலிலும் அதிமுக தொண்டர்களிடம் நம்பிக்கையாக பேசி வருகிறார்.

என்ன சொன்னார்
இந்த நிலையில்தான் நேற்று அதிமுக மதுரை நிர்வாகி சுஜாதா ஹர்ஷினி என்ற பெண்ணிடம் சசிகலா பேசினார். இதில் மிகவும் நம்பிக்கையாக பேசிய சசிகலா, நான் மீண்டும் கண்டிப்பாக கட்சிக்கு வருவேன். எனக்கு தொண்டர்கள் மிக முக்கியம். தொண்டர்களை காப்பாற்றுவேன். கட்சியை மீட்பேன்.

ஆட்சி
கட்சியை மட்டுமல்ல ஆட்சியையும் மீட்பேன். யாரும் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன். அம்மா கட்சியை எப்படி நடத்தினார்களா அப்படி நடத்துவேன் என்று சசிகலா கூறினார். சசிகலா இப்படி பேசுவது புதிதல்ல, இது எல்லா ஆடியோவிலும் சமீபமாக சசிகலா சொல்வதுதான். தினமும் சசிகலா சார்ப்பில் இப்படி ஆடியோ வெளியானாலும், இதுவரை அவரின் தரப்பு அதிரடியாக எதுவும் செய்யவில்லை.

அதிமுக நிர்வாகிகள்
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் யாரும் வெளிப்படையாக சசிகலாவை ஆதரிக்கவில்லை. கீழ்மட்ட தொண்டர்கள், பெயர் தெரியாத நிர்வாகிகள் சிலர் மட்டுமே, சசிகலாவுடன் இதுவரை பேசி வருகிறார். இந்த நிலையில்தான் நேற்று போன் காலில் எதிரே இருந்த அதிமுக மதுரை நிர்வாகி சுஜாதா ஹர்ஷினி சொன்ன சில விஷயங்கள் சர்ச்சசையாகி உள்ளது.

என்ன சொன்னார்
சுஜாதார தனது பேச்சில்.. உங்களை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ்ஸும், பையனும் பேசினார்கள்.. ஆனால் இவர் மட்டும் உங்களை கட்சிக்குள் சேர்க்கவே விடவில்லை. உங்களை உள்ளே விடாமல் தடுக்க இவர் மட்டும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டார். இப்போ கூட நிறைய பேசுகிறார்கள். உங்களுக்கு ஆதரவாக பேசினாலே அவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். சுஜாதா இப்படி பேசியதுதான் சர்ச்சையாகி உள்ளது. இதில் அவர் குறிப்பிட்டு இருக்கும் இரண்டு விஷயம், சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

முதல் விஷயம்
அதிமுகவில் சசிகலாவை பற்றி பேச்சு எடுத்து அவர் முட்டுக்கட்டை போடுகிறார் என்று சுஜாதா கூறியுள்ளார். இது இபிஎஸ் அல்லது கேபி முனுசாமி ஆகியோரை பற்றியதாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அவர்கள் பெயரை குறிப்பிடாமல் சுஜாதா இப்படி பேசி உள்ளார் என்கிறார்கள். சசிகலா அதிமுகவிற்குள் வருவதை இபிஎஸ், கே.பி. முனுசாமி, சிவி சண்முகம் நேரடியாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது விஷயம்
இரண்டாவதாக "உங்களை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ்ஸும், பையனும் பேசினார்கள்.. " என்று சுஜாதா கூறியுள்ளார். அதாவது சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ், ஓபிஆர் இருவரும் பேசியதாக சுஜாதா குண்டை தூக்கி போட்டுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில், அவரின் பேச்சு பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா சிறையில் இருந்து வந்த சில நாளிலேயே ஓபிஎஸ் தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் சசிகலாவிற்கு கொஞ்சம் ஆதரவாக பேசி இருந்தார்.

ஆதரவு பேச்சு
ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க சொன்னதே சசிகலா நிரபராதி என்று நிரூபிக்கத்தான் என்று ஓபிஎஸ் சமாதான தூது அனுப்புவது போல பேசி இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது சசிகலாவை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ், ஓபிஆர் இருவரும் பேசியதாகவும், இதற்கு கட்சியில் முட்டுக்கட்டை போடப்பட்டதாகவும் சுஜாதா கூறி இருக்கிறார். அதிமுகவில் கோஷ்டி மோதல் நிலவும் நிலையில் இந்த ஆடியோ பரபரப்பை கிளப்பி உள்ளது.

சசிகலா ஓபிஎஸ்
இபிஎஸ் தனது உரிய மதிப்பை அளிக்கவில்லை என்பதால் ஓபிஎஸ் இப்படி சசிகலாவிற்கு ஆதரவாக மாறுகிறாரா என்றும் இணையத்தில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். சசிகலாவிற்கு எதிராக இபிஎஸ் வெளிப்படையாக சவால் விடும் நிலையில் ஓபிஎஸ் அமைதியாக இருக்கிறார்.. சசிகலாவை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சியா இது.. புயலுக்கு முன்பான அமைதியா இது என்று கேள்வி எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications