ஏன் இந்த அரசியல்வாதிகள் இவ்வளவு கொச்சையா பேசுறாங்க.. முகம் சுளிக்கும் வாக்காளர்கள்
சென்னை: திமுக தலைவர்கள் சிலர் பேசும் பிரசார பேச்சுக்கள் மிகவும் ஆபாசமாகவும், அருவருக்க தக்க வகையிலும் இருக்கிறது என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுங்கட்சியை குறை சொல்லி வாக்கு சேகரிக்கும் முறை போய் ஆபாசமாக பேசி வாக்கு சேகரிக்கும் முறையை திமுக மேற்கொண்டு வருவதாக அதிமுகவினரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் களம் அனலை கிளப்பி வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மிகவும் ஆபாசமான வார்த்தைகள் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது பொது மக்களை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. குறிப்பாக ஆ. ராசா தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது மாநிலம் முழுவதும் பேசும் பொருளாக மாறியது.

"நான் பேசியதை வெட்டியும் ஒட்டியும் செய்திருக்கிறார்கள், நான் எதுவும் தவறாக பேசவில்லை மக்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் எதுவும் செய்ய முடியாது" என்று விளக்கம் அளித்திருந்தார் ராசா. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்கையில், "சாமானியன் முதலமைச்சரானால் இப்படி தான் பேசுவார்களா ? என்று முதல்வர் கருத்து தெரிவித்தார். அதன் பின் கட்சி தலைமை அறிவுறுத்தியத்தின் பெயரில் வேண்டா விருப்பமாக மன்னிப்பு கடிதத்தை கேமராக்கள் முன்னாடி வாசித்து சென்று விட்டார் ராசா.

இந்த நிலையில், உதயநிதிஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது "மத்திய அரசு சொன்னால் முதல்வர் அப்படியே கேட்பார். நில்லுன்னா நிப்பாரு, உக்காருன்னா உக்காருவாரு, முட்டி போடுன்னா முட்டி போடுவாரு, அப்பறம் என்ன செய்வாரு" என்று தொண்டர்களை பார்த்து கேட்கும் போது தொண்டர்களில் ஒருவர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் முதல்வரை விமர்சித்தார். தொண்டர்களை தூண்டிவிட்டு அவ்வாறு பேச வைத்து விட்டு, "ஒரு முதல்வரை அப்படியா பேசுவீங்க, அப்படியெல்லாம் பேச கூடாது" எனக் கூறினார்.

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தயாநிதி மாறன், அதிமுக நிர்வாகி ராஜேந்திர பாலாஜி சொன்னதாக சொல்லி "ஜெயலலிதா எங்களுக்கு மம்மி, நரேந்திர மோடி எங்களுக்கு டாடி" என்று மறைமுகமாக விமர்சித்தார். தேர்தல் பரப்புரையின் போது மூத்த அரசியல்வாதிகள் என்ற வயது வரம்பு கூட இல்லாமல் திமுகவினர் தொடர்ந்து இவ்வாறு பிரச்சாரங்களில் பேசி வருகின்றனர். இது தான் திமுகவின் கலாச்சாரமா என்று பலரும் கண்டனம் எழுப்பி வருகின்றனர்.
ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை என்றால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொது மக்களை எப்படி பேசுவார்கள் என்று முதலமைச்சரே தெரிவித்துள்ளார். 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாத விரக்தியிலும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என திமுகவினர் அனைவரும் ஆபாச பேச்சுக்களை கையில் எடுத்திருக்கிறார்கள் என்று அதிமுகவினரும் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.
-
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications