சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

‘யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கோருவது? இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து .ராஜேந்திரபாலாஜி ட்வீட்!

Google Oneindia Tamil News

சென்னை: 'யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கோருவது? வழக்கை தொடுத்து வாதாடி வென்றது அதிமுக, அதற்கு உரிமை கோருவது திமுக. என்ற இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்பு குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

 aiadmk minister rajendra balaji attacks dmk over obc reservation judgement celebration

மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. அத்துடன்

ஒபிசி இடஒதுக்கீடு தொடர்பாக 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அதனை அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 aiadmk minister rajendra balaji attacks dmk over obc reservation judgement celebration

இந்த தீர்ப்பிற்கு திமுக தான் காரணம் என்றும், திமுகவின் வழக்கறிஞர் வில்சன் எடுத்து வைத்த வாதம் தான் முக்கிய காரணமாக அமைந்தது என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. திமுகவினர் இந்த தீர்ப்பை கொண்டாட ஆரம்பித்தனர். 'மருத்துவக் கல்வியில், ஓ.பி.சி.,க்கு, இடஒதுக்கீடு உரிமை உண்டு' என, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, தி.மு.க., சொந்தம் கொண்டாடுவற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

3-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வால் கல்வியை பாதியில் கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: திருமாவளவன்3-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வால் கல்வியை பாதியில் கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: திருமாவளவன்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் 'யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கோருவது? வழக்கை தொடுத்து வாதாடி வென்றது அதிமுக, அதற்கு உரிமை கோருவது திமுக. சொந்த புத்தியும் இல்லை, உழைப்பும் இல்லை. அன்றுமுதல் இன்றுவரை, ஒட்டுண்ணி அரசியல் செய்வது திமுக' என்று பதிவிட்டுள்ளார்.

English summary
aiadmk minister rajendra balaji attacks dmk over obc reservation judgement celebration. he said AIADMK won the case but Claiming DMK. No own intellect .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X