CJP Protest LIVE: வன்முறைக்கு காரணமாம்! போராட்டக்காரர்களில் 70 பேரை கைது செய்த டெல்லி போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டிருக்கின்றனர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

போராட்டம் தீவிரமடைந்திருப்பதால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், தர்மேந்திர பிரதான் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CJP Protest

Jul 20, 2026, 9:57 pm IST

தங்கள் மீது நடத்திய வன்முறைக்கு நன்றி கூறி.. டெல்லியில் காவலர்களை கை தட்டி வழியனுப்பி வைத்த மாணவர்கள்
Jul 20, 2026, 9:31 pm IST

இரவிலும் தொடரும் மாணவர்களின் போராட்டம்; டெல்லியில் நீடிக்கும் பதற்றம். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி தொடரும் போராட்டம். கரப்பான் பூச்சி கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே மயக்கம்.
Jul 20, 2026, 8:56 pm IST

வன்முறையில் ஈடுபட்டதாக கூறி போராட்டக்காரர்களில் 70 பேரை டெல்லி போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
Jul 20, 2026, 8:54 pm IST

மாணவர்கள் போராட்டத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட போலீசார் பலர் காயமடைந்திருப்பதாக டெல்லி போலீஸ் அறிவிப்பு
Jul 20, 2026, 8:51 pm IST

டெல்லி போராட்டம்: பாகிஸ்தானுடன் தொடர்புடைய சோஷியல் மீடியா கணக்குகள் குறித்து டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கியிருப்பதாக அறிவிப்பு. போராட்டத்தில் ஈடுபட்ட பலரும், மாணவர்கள் இல்லை என்றும் போலீஸ் விளக்கம்
Jul 20, 2026, 8:05 pm IST

டெல்லியிலிருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டிக்கிறேன். பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக.. காவல்துறையை கொண்டு அரசு அடக்குமுறையில் ஈடுபடுவது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது - தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
Jul 20, 2026, 6:50 pm IST

“சொந்த மாணவர்களையே கண்டு அச்சம்! எந்த மாதிரியான அரசு இது? மாணவர்களின் கேள்விக்கு வார்த்தைகளால் பதில் அளிக்காமல் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் லத்தி மூலம் பதிலளிக்கும் இந்த அரசு..எந்த மாதிரியான அரசு இது?” - மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி
Jul 20, 2026, 6:50 pm IST

“தேர்வு குளறுபடிகளுக்கு நியாயம் கேட்ட மாணவர்களை தாக்கியது, இந்த அரசு ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பை எதிர்கொள்ள விரும்பவில்லை என்பதை காட்டுகிறது” - தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி
Jul 20, 2026, 6:47 pm IST

“நீட் பேப்பர் லீக்-க்கு காரணமானவர்கள் சுதந்திரமாக சற்றி திரிகிறார்கள். ஆனால், அது குறித்து கேள்வி எழுப்பிய இளைஞர்களும், மாணவர்களும் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அரசு இளைஞர்களுக்கு துரோகம் செய்வது மட்டுமல்லாது அவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது” என ராகுல் காந்தி விமர்சனம்
Jul 20, 2026, 6:42 pm IST

மோடி மீது ராகுல் விமர்சனம்

“இந்திய வரலாற்றிலேயே, இளைஞர்களுக்கு எதிரான மிக மோசமான நிலைப்பாட்டை கொண்ட பிரதமர் நரேந்திர மோடிதான். எந்த அளவுக்கு இளைஞர்களுக்கு எதிரானவர் எனில், தோல்வியடைந்த கல்வி அமைச்சரை ராஜினாமா கூட இவராக செய்ய வைக்க முடியவில்லை”- ராகுல் காந்தி
Jul 20, 2026, 6:09 pm IST

மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல்

நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள், இளைஞர்கள் மீது போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் கொடூர தாக்குதல். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நீதி கேட்டு மீண்டும் போராட்டம்
Jul 20, 2026, 5:41 pm IST

மீண்டும் குவியும் போராட்டக்காரர்கள்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி அடித்த நிலையில், மீண்டும் போராட்டக்காரர்கள் குவிந்து வருகின்றனர்.
Jul 20, 2026, 5:11 pm IST

ஜே.பி.நட்டா வலியுறுத்தல்

போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா வலியுறுத்தல். நட்டாவை சந்தித்து CJP நிர்வாகிகள் கோரிக்கையை கொடுத்திருந்த நிலையில், நட்டா வலியுறுத்தல்
Jul 20, 2026, 5:04 pm IST

அமித்ஷா-தர்மேந்திர பிரதான் ஆலோசனை முடிந்தது

தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அமித்ஷாவை சந்தித்து தர்மேந்திர பிரதான் பேசியிருந்தார். இந்த சந்திப்பு நீண்ட நேரம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறைவடைந்திருக்கிறது
Jul 20, 2026, 4:42 pm IST

மாணவர்கள் முன்வைத்த நிபந்தனைகள்

மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித் CJP அமைப்பினர், சோனம் வாங்சுக் விடுவிக்கப்பட வேண்டும், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும், நீட் குளறுபடியால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று 3 கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர்.
Jul 20, 2026, 4:34 pm IST

கோரிக்கையை கொடுத்த இளைஞர்கள்

கோரிக்கையை கொடுத்த இளைஞர்கள்
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் கரப்பான் பூச்சி கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர்கள், போராட்டத்தின் கோரிக்கைளை கொடுத்திருக்கின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று கூறியிருக்கின்றனர்.
Jul 20, 2026, 4:30 pm IST

அபிஜித் திப்கே பேச்சு

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது போலீசார் கடுமையான தடியடி நடத்திய நிலையில், தற்போது போராட்டக்காரர்களிடம் கரப்பான் பூச்சி கட்சி அமைப்பின் தலைவர் அபிஜித் திப்கே உரையாற்றி வருகிறார்
Jul 20, 2026, 4:25 pm IST

ஜந்தர் மந்தரிலிருந்து விரட்டப்பட்ட மாணவர்கள்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அமைத்திருந்து கூடாரங்களை காவல்துறையில் அப்புறப்படுத்தியிருக்கின்றனர். அதேபோல, மாணவர்களையும் கடுமையான தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்திருக்கின்றனர்.
Jul 20, 2026, 4:17 pm IST

டெல்லி போலீஸ் விளக்கம்

டெல்லி போலீஸ் விளக்கம்
கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் திப்கே கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
Jul 20, 2026, 4:08 pm IST

மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எம்பிக்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக, டிம்பிள் யாதவர் உள்ளிட்ட சமாஜ்வாதி கட்சியின் எம்பிக்கள் பேரணி நடத்தியிருக்கின்றனர்.
Jul 20, 2026, 4:08 pm IST

போலீஸ் தாக்குதலுக்கு கண்டனம்நாடாளுமன்றம் நோக்கி பேரணியில் ஈடுபட்ட மாணவர்களையும், இளைஞர்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் கடுமையாக தாக்கியிருக்கிறது என கரப்பான் பூச்சி கட்சி குற்றச்சாட்டு

நாடாளுமன்றம் நோக்கி பேரணியில் ஈடுபட்ட மாணவர்களையும், இளைஞர்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் கடுமையாக தாக்கியிருக்கிறது என கரப்பான் பூச்சி கட்சி குற்றச்சாட்டு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+