ரெய்டு குறித்த கேள்வி: அதிமுக எத்தனையோ சோதனையை கடந்து வந்திருக்கு.. துணிந்து பேசிய ஜெயக்குமார்
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும் ரெய்டு பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்படமாட்டார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை அதிமுக எதிர்கொண்டது. பாஜக உடன் தொடர்ந்து இணக்கமான போக்கை அதிமுக கடைபிடித்து வருகிறது. அதிமுகவில் தலைமைப்பதவி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் அங்கீரித்து விட்டது.

இதன் மூலம் தற்போது அதிமுக முழுமையாக எடப்பாடி வசம் வந்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. கடந்த கடந்த 14-ந் தேதி டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கூட்டணியை இறுதி செய்தல் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக சொல்லப்பட்டது.
இதற்கு மத்தியில், அண்ணாமலை, பேரறிஞர் அண்ணாவை விமர்சித்து கருத்து கூறியதற்கு அதிமுக கடும் எதிர்வினையாற்றியது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அண்ணாமலையை கண்டித்து கடுமையாக பேசினார். இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. கடந்த 18 ஆம் தேதி செய்தியாளகளை சந்தித்த ஜெயக்குமார், பாஜக கூட்டணியில் அதிமுக தற்போது இல்லை என்றும் தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் எனவும் பேசினார்.
இதையடுத்து, நேற்று முன் தினம் அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசியிருந்தனர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி நிலை என்ன என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ரெய்டு பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக பயப்படாது என்றும் தெரிவித்துளார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில், "கடந்த 18 ஆம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது வேறு எதுவும் கூற இயலாது" என்றார். அப்போது செய்தியாளர்கள் நீங்கள் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்துவதால், பேசுவதால் உங்களை சார்ந்தவர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்துவார்கள் என்ற தகவல் பரவுகிறது என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம். இதை பல தடவை சொல்லியாச்சு.. சும்மா இந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படும் இயக்கம் அதிமுக கிடையாது. 1972 முதல் அதிமுக பல சோதனைகளை தாண்டி வந்த இயக்கம். பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் ஜெயலலிதா அதிமுகவை இருமுறை வெற்றி பெற வைத்தார்" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications