அதிமுக விவகாரம்.. ஹைகோர்ட் தீர்ப்பால் குஷி.. ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை!
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியிருக்கும் மூத்த தலைவர் செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் தமது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதால் பரபரப்பு தொடருகிறது.
அதிமுகவில் திடீரென அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். கோவை அன்னூரில் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழாவை புறக்கணித்தார் கே.ஏ.செங்கோட்டையன்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சியில் எங்களை அடையாளம் காட்டிய எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் படங்கள் இடம் பெறவில்லை; இதனை முன்கூட்டியே என்னை சந்தித்த விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்து இருந்தேன் என்றார். இதற்கு பதிலளித்த எடப்பாடி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்ச ஜெயக்குமார், பாராட்டு விழா நடத்தியது அதிமுக அல்ல; விவசாயிகள் சங்கம்தான் என மழுப்பலான பதிலை கொடுத்தார்.
மேலும் அதிமுகவில் போர்க்கொடிய தூக்கிய செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் வீட்டுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவை தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது. மேலும், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் பின்னடைவாகும்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தமது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு வெளியான நிலையில் செங்கோட்டையன் தமது ஆதரவாளர்களை அழைத்து விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications