சர்வாதிகார, சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க தீர்மானம்.. இபிஎஸ்ஸை விமர்சித்த ஓபிஎஸ் தரப்பு

சென்னையில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என அதிமுக ஓபிஎஸ் அணி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவில் ஒற்றை தலைமை யார் என்ற அதிகார போட்டி நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். பதிலுக்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்தார்.

எடப்பாடி தன்னை நீக்கியதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதனிடையே ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் கேஎஸ் தென்னரசுவும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருந்தது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதில், பொதுக்குழு மூலமாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதற்கிடையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது. தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

ஹோட்டல் அசோகாவில் நடந்த இந்த கூட்டத்தில் பேசிய வைத்திலிங்கம் கூறுகையில் நமது பலம் எது என்பதை நிரூபிக்க திருச்சியில் மாநாடு நடத்த வேண்டும். அந்த மாநாட்டை நான் சிறப்பாக நடத்தி முடிக்கிறேன் என்றார். தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் கட்சி யார் பக்கம் என தெரிந்துவிடும். * மாபெரும் கூட்டத்தை கூட்டி, யாருக்கு பலம் உள்ளது என்பதை நிரூபிப்போம் என மனோஜ் பாண்டியன் பேசியுள்ளார்.

ஓபிஎஸ் எங்கே என ஈரோடு கிழக்கு தொகுதியில் தொண்டர்கள் தேடுவதாக புகழேந்தி தெரிவித்தார். அது போல் மதுரையில் இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அண்ணா, எம்ஜிஆருக்கு வெற்றியை தந்த திருச்சியில் மாநாட்டை நடத்தலாம் என கு.ப.கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடும் என தெரிகிறது.

இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு 4 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. அதை இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் வாசித்தார்.

அதன்படி தீர்மானங்கள் பின்வருமாறு:

  1. சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும்.

  2. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என தீர்மானம். இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக பெற தீர்மானம்
  3. எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள், கழகத்தின் பொன்விழா ஆகியவற்றை முப்பெரும் விழாவாக கொண்டாட தீர்மானம். இந்த விழா மார்ச் மாதம் நடைபெறுகிறது.
  4. மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமித்து வந்த நிலையில் இனி ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை அளவில் நிர்வாகிகளை நியமிக்க தீர்மானம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+