ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியை வைத்தே கோர்ட்டில் மடக்கிய அதிமுக.. கோடை வெயிலை விட அனல் பறந்த விவாதங்கள்
ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் , புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்க எந்த நோட்டீஸும் தரவில்லை- அதிமுக தரப்பு
சென்னை: ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ், கட்சியிலிருந்து புகழேந்தியை நீக்கிய போது எந்த நோட்டீஸும் தரவில்லை என அதிமுக தரப்பு வாதத்தை முன் வைத்தது.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழுவில் வைத்து ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இந்த பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதன் தீர்ப்பு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 24 ஆம்தேதி நடத்தப்படுகிறது. இதை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் நீதிமன்றத்தை நாடினார்.

அவசர வழக்கு
அவசர வழக்காக இந்த வழக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்தல் நடத்திக் கொள்ளலாம். ஆனால் அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது அதிமுக தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வாதத்தில் கட்சியை விட்டு நீக்க ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் , புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்க எந்த நோட்டீஸும் தரவில்லை.

பொதுச் செயலாளர் தேர்தல் ஏன்
பொதுச் செயலாளர் தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது என்றால் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. அதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்பதால் இந்த தேர்தல் அவசியம் ஆகும். அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்ய கால அவகாசம் தேவைப்படும் என்பதால் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார். நிறைய கட்சி பணிகள் இருப்பதால்தான் பொதுச் செயலாளர் தேர்தல் அவசியம்.

கட்சி விதி
ஜூலை 11 பொதுக் குழு தீர்மானங்கள் கட்சி விதியை மீறும் வகையில் இல்லை. கட்சி கட்டமைப்பில் மாற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை. கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே விதிகளில் நிபந்தனை விதிக்கப்பட்டதாக அதிமுக தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது. இந்த வாதங்களுக்கு ஓபிஎஸ் பதில் வாதத்தை முன் வைப்பார் என தெரிகிறது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications