இஃப்தார் நோன்பு.. சென்னையில் இன்று அதிமுக நோன்பு திறப்பு நிகழ்ச்சி: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று அதாவது 21ம் தேதி சென்னை எழும்பூரில் நடக்கிறது. அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெள்ளிக் கிழமை, இந்த இஃப்தார் விருந்து வழங்க உள்ளார்.

அதிமுக சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டும், அதிமுக சார்பில் இப்தார் விருந்து நடக்க உள்ளது.

edappadi palaniswami ADMK iftar party

அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெள்ளிக் கிழமை சென்னையில் இஃப்தார் விருந்து வழங்க உள்ளார். இதில் அதிமுகவினர் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

இதுகுறித்து அதிமுக தரப்பில் வெளியான அறிக்கையில் உள்ளதாவது: "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா அவர்களின் வழியில் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருகின்ற மார்ச் 21ம் தேதி, வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணியளவில் சென்னை, எழும்பூர், புஹாரி சிராஸ் ஹாலில் இஃப்தார் விருந்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், கழகத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+