பாலூட்டி வளர்த்த கிளி..ஓபிஎஸ் கூட்டிலிருந்து பறந்த ‘ரத்தத்தின் ரத்தம்’.? ஸ்டன் ஆகி நிற்கும் ஓபிஎஸ்?
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக தேர்வு செய்யப்பட இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து பல மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் தாவி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் ஓபிஎஸ்-ன் வலதுகரம் போல் செயல்பட்டு வந்த முக்கிய பிரமுகர் ஒருவர் இபிஎஸ் பக்கம் தாவி இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தியே தீருவோம் என எடப்பாடி தரப்பும் எப்படியாவது பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பும் கங்கணம் கட்டிக்கொண்டு களப்பணியாற்றி வருகின்றனர்,
சற்றே கலக்கத்தில் இருந்தாலும் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம், காவல்துறை, தேர்தல் ஆணையம், ட்விட்டர் என முடிந்த அளவு, கடைசி நேர அஸ்திரங்களை பயன்படுத்தி பொதுக்குழுவை தடுக்க முயற்சித்து வருகின்றனர்.

அதிமுகவில் மோதல்
காரணம் பொதுக்குழு நடந்தால் அவர் பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்பதை நன்கு அறிந்துள்ளனர். இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் வலது கரங்கள் போல செயல்பட்டு வந்த தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயாலளர் கணேஷ் ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுகச் செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் எடப்பாடியை சந்தித்து அவருக்கு தங்களது முழு ஆதரவினை தெரிவித்தனர்.

ஓபிஎஸ் அதிர்ச்சி
மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும் தர்மயுத்தம் நடத்தியபோது பக்கபலமாக செயல்பட்டவருமான முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு நேரடியாக 11 மாவட்ட செயலாளர்கள் ஆதரவளித்து வந்ததாக கூறிய நிலையில் அந்த எண்ணிக்கை படிப்படியாக சரிந்து தற்போதைய நிலவரப்படி ஓபிஎஸ்-க்கு 6 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

எடப்பாடிக்கு ஆதரவு
ஆனால் இதற்கு நேர் மாறாக வைத்திலிங்கம் பேசிய போது ஓபிஎஸ்-க்கு நேரடியாக 15 மாவட்ட செயலாளர்களும் மறைமுகமாக 15 மாவட்ட செயலாளர்களும் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு உயர்ந்து வருவது காரணமாக கிட்டத்தட்ட 90% மாவட்ட செயலாளர்கள் அவர் பக்கம் சாய்ந்துவிட்டனர். இந்நிலையில் சென்னையில் ஓபிஎஸ்-ன் வலது கரம் போல செயல்பட்டு வந்த முக்கிய மாவட்டச் செயலாளரான வேளச்சேரி அசோக் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்சி மாறிய அசோக்
இன்று காலை அல்லது மாலையில் எடப்பாடி பழனிச்சாமியை வேளச்சேரி அசோக் நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்குவார் என கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 65க்கும் அதிகமான மாவட்ட செயலாளர்களின் ஆதரவு உள்ள நிலையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 6 ஆக உள்ளது. வேளச்சேரி அசோக் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தாவினால் இந்த எண்ணிக்கை ஐந்தாக சரியும் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் ஓபிஎஸ். மேலும் இந்த எண்ணிக்கை சரியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!











Click it and Unblock the Notifications