Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது மட்டுமல்ல இன்னும் நிறைய நடக்கும்...என்ன செய்வார்கள் - நமது எம்ஜிஆர் மூலம் பேசும் டிடிவி தினகரன்

இன்னும் நிகழப் போகும் சம்பவங்கள் ஏராளம் !ஏராளம் !அப்போது என்ன செய்வார்கள் இந்த துரோகிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அரங்கேற்றங்கள் நடைபெறப்போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்திய சசிகலாவிற்கு எதிராக நிர்வாகிகள் காவல்துறை டிஜிபி வரை சென்று புகார் கொடுத்துள்ளனர். இன்னும் நிகழப் போகும் சம்பவங்கள் ஏராளம் !ஏராளம் !அப்போது என்ன செய்வார்கள் என்று நமது எம்ஜிஆர் நாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகாலம் தண்டனை பெற்ற சசிகலா சில தினங்களுக்கு முன்பு விடுதலையானார். ஆரம்பமே அதகளம் என்பது போல விடுதலையான நாளிலேயே ஜெயலலிதாவின் காரில் கட்சிக்கொடி பறக்க பண்ணை வீட்டிற்கு சென்றார் சசிகலா.

வரும் 8ஆம் தேதி சசிகலா சென்னை திரும்ப உள்ள நிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளதாக அமமுகவினர் கூறியுள்ளனர். சசிகலா கட்சிக்கொடி பயன்படுத்தியது சட்டப்படி குற்றம் என்று கூறியுள்ள அதிமுக நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

மணியோசை கேட்கிறது

மணியோசை கேட்கிறது

இந்நிலையில் அமமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் மணியோசை ஒலிக்கிறது இனியும் ஏன் தயக்கம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தியாகத் தலைவி சின்னம்மா தனித்துவிடப்பட்டவர் என்று இறுமாப்போடு பேசும் சுயநல கூட்டங்களுக்கு சம்மட்டி அடி கொடுப்போம், கோடி தொண்டர்களின் தியாகத் தலைவி சின்னம்மா என்பதை நிரூபித்துக் காட்டும் ஒரு அருமையான வாய்ப்பு சந்தர்ப்பம் தேர்தல் களம். காலம் நம்மை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இன்னும் நடக்கும்

இன்னும் நடக்கும்

கழகக் கொடியை தியாகத் தலைவி சின்னம்மா பயன்படுத்தியது கண்டு துரோக கூட்டம் கலங்குகிறது காவல்துறை டிஜிபி வரை சென்று புகார் தருகிறது. இன்னும் நிகழப் போகும் சம்பவங்கள் ஏராளம் !ஏராளம் !அப்போது என்ன செய்வார்கள் இந்த துரோகிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அரங்கேற்றங்கள் நடைபெறப்போகிறது. அப்போது எங்கே போய் முறையிட போகிறீர்கள் இனியாவது மாறுங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்.

குள்ளநரி கூட்டம்

குள்ளநரி கூட்டம்

இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது ;ஏகடியம் பேசுவதையும் இறுமாப்போடு பேசுவதையும் மண்ணை கவ்வ செய்து வெட்கி தலைகுனிய செய்வோம் இப்போதைக்கு இது மட்டுமே நமக்கு ஒரே பணியாக இருக்கட்டும். தீய சக்திக்கு வழிவிட்டு வளர்த்தவர்கள் இடம் வாலாட்டும் குள்ள நரிகளின் கொட்டத்தை அடக்குவோம்.

சசிகலா தலைமையில் ஆட்சி

சசிகலா தலைமையில் ஆட்சி

தியாகத் தலைவி சின்னம்மா தலைமையில் அம்மாவின் அரசை மீண்டும் ஏற்படுத்தும் என்ற தீராத வேட்கையை, தாயின் லட்சிய கனவை நிறைவேற்ற உறுதி ஏற்று கண் துஞ்சாது களப்பணி ஆற்றுவோம். துரோகிகளுக்கு மீண்டும் நியாபகப்படுத்துகிறேன். தியாகத் தலைவி சின்னம்மா தலைமையில் கழகமும் ஆட்சியும் செம்மாந்த நடைபோட வேண்டும்.

தீய சக்தி

தீய சக்தி

சிலரின் சுயநலத்திற்காக தொண்டர்களின் எண்ணத்தை ஆசையை, சிதைக்க முற்படக் கூடாது. மாபெரும் இயக்கத்தில் கருத்து பரிமாற்றம் முக்கியமே தவிர கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை களைய முற்பட வேண்டும். அதையே பூதாகரமாக்கி தங்களின் அபிலாசைகளுக்கு தீயசக்தி கூட்டத்திற்கு வழி விடாதீர்கள்.

கைகோர்ப்போம்

கைகோர்ப்போம்

சுயநலம் அறவே விடவேண்டும் பொதுநலம் மேலோங்கி பெருக பெருக தொண்டர்களின் எண்ணங்கள் நிறைவேற வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற குழப்பம் யாருக்கும் வரவேண்டாம். ஏற்கனவே மணியின் ஓசையை நாடெங்கும் ஒலிக்கிறது. தீர்க்கமான, தெளிவான முடிவு எடுத்து, கைகோர்த்து புறப்பட்டு வெற்றிகளை ஈட்டிவோம்; காலம் கடந்துவிடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக உடன் அமமுக இணைப்பு

அதிமுக உடன் அமமுக இணைப்பு

சசிகலா வருகைக்குப் பிறகு தமிழக அரசியலில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதிமுகவை கைப்பற்றுவோம் என்றும் சசிகலா தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சி அமைப்போம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நமது எம்ஜிஆர் நாளிதழும் ஒன்று சேரவே அழைப்பு விடுத்துள்ளது. இதுநாள் வரை நடந்த சண்டை, சச்சரவுகளை மறந்து ஒன்றிணைவார்களா? பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+