தவெக weekend கட்சி.. வாரக் கடைசியில் விஜய் Tour! விரைவில் அனைத்துக்கும் End! வைகைச் செல்வன் சுளீர்
சென்னை: நடிகர் விஜய் கட்சி ஒரு weekend கட்சி, ஐடி ஊழியர்கள் weekend நேரத்தில் உல்லாசமாக செல்வது போல விஜய் வருகிறார், weekend கட்சி விரையில் end கட்சியாக ஆகிடும் எனவும், அதிமுக மூன்று அல்லது நான்காக உடைந்தால் காணாமல் போயிடும் என்று நினைக்கிறார்கள் அது நடக்காது என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பிள்ளையார்பாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த வைகை செல்வன் பேசுகையில், அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் காணாமல் போனதாக வரலாறு. அதிமுக மூன்று அல்லது நான்காக உடைந்தால் காணாமல் போயிடும் என்று நினைக்கிறார்கள் அது நடக்காது.

விஜய் கட்சி
இசைஞானி இளையராஜா மகத்தான ஒரு கலைஞர், ஆனால் பொது மேடையில் அநாகரீகமாக வார்த்தைகள் சொல்லக் கூடாது. நடிகர் விஜய் கட்சி ஒரு weekend கட்சி, ஐடி ஊழியர்கள் weekend நேரத்தில் உல்லாசமாக செல்வது போல விஜய் வருகிறார், weekend கட்சி விரையில் end கட்சியாக ஆகிடும். வாக்காளர்களாக இல்லாதவர்கள் தான் விஜயை காண வருகிறார்கள். பேரறிஞர் அண்ணாவின் நீட்சியாக எம்ஜிஆர் பார்த்தார்கள். அப்படி ஒரு கட்ட அமைப்பு நடிகர் விஜய்க்கு இல்லை.
அதிமுக
அதிமுகவை பொறுத்தவரை வலுவாக இருக்கிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. விலாசம் தெரியாமல் காணாமல் போனவர்கள். அவர்கள் பேசுவதை எல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்பதை யாராலும் தடுக்க முடியாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகலாம். ஆனால் என்ன நடக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
அதிமுகவில் பிளவு
அதிமுகவில் பிளவு என்று பேசுவதெல்லாம் தேவையற்றது. தற்போது மட்டுமல்ல புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவில் பிளவை உண்டு செய்யலாம் என நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் போனது தான் வரலாறு. இது காலம் நமக்கு சொல்லி இருக்கிற உண்மை. நேற்று வந்தவர்கள், நாளை வருபவர்கள் கூட என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என்ன நடக்க வேண்டும் என்பதை இயற்கை முடிவு செய்யும். எடப்பாடி பழனிச்சாமி இயற்கையாகவே அமைந்த தலைவர்." என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கட்சி ஒன்றிணைய வேண்டும் என கூறி வருகின்றனர். ஏற்கனவே கட்சி ஒன்று சேர வேண்டும் என பேசிய செங்கோட்டையனும் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இன்று டெல்லியில் மதிய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேச இருக்கிறார். இதற்கிடையே அதிமுக ஒன்றிணைந்து குறித்து பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், அதிமுக ஒன்றிணையாது என வைகைச் செல்வன் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?











Click it and Unblock the Notifications