'கோமாளி’ நானே அடிச்சி விரட்டுவேன்.. எடப்பாடியிடம் சரண்! அண்ணாமலையை விளாசிய அதிமுக காயத்ரி ரகுராம்
சென்னை: "அதிமுக கூட்டணி அமைந்தால் ராஜினாமா செய்வேன் என்று பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அண்ணாமலை, நான் யாருக்கும் எதிரானவன் கிடையாது. எனவே பொறுத்திருந்து பாருங்கள். நான் டெல்லியில் பேசும் போது தொண்டனாக பணியாற்றவும் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளேன்" என்றார். அண்ணாமலையின் இந்த பேச்சு தொடர்பாக அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒராண்டு மட்டுமே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் ஏற்படுமா? என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதன்பிறகே இந்த பேச்சுக்கள் பலமாக எழத்தொடங்கியுள்ளன.

எடப்பாடி சென்றுவிட்டு வந்த மறுநாளே அண்ணாமலையும் டெல்லி சென்று வந்தார். இவ்வாறாக அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா? என்ற பேச்சு அதிகரித்துள்ள நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அண்ணாமலை பரபரப்பாக பேசினார். அண்ணாமலை கூறுகையில், "என்னால் யாருக்கும் பிரச்சினை வராது. மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது.
பாஜக வளர்ச்சி முக்கியம். எனது தனிப்பட்ட வளர்ச்சியோ, மற்றவர் வளர்ச்சியோ முக்கியம் கிடையாது. வருங்காலத்தில் என்னுடைய நிலை எப்பொழுதுமே தொடர்ச்சியாக இருக்கும். கருத்துக்களை கருத்துக்களாக வைத்திருக்கிறேன். அது விஜயாக இருந்தாலும் சரி, முதல்வர் ஸ்டாலினாக இருந்தாலும் சரி. ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் மாநிலத்தின் உள்துறை அமைச்சரை சந்திப்பதில் எந்தவித தவறும் இல்லை.
செங்கோட்டையன் பயணத்தில் யூகத்தை எழுதுகின்றீர்கள். பாஜகவை பொருத்தவரை யாரையும் மறைமுகமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை" என்று பேசினார். அண்ணாமலை பேச்சு தொடர்பாக கடுமையான விமர்சனங்களை அதிமுக மகளிரணி துணைப் பொதுச்செயலாளர் காயத்ரி ரகுராம் முன்வைத்து இருக்கிறார். காய்த்ரி ரகுராம் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கு consistent ஆ stand இல்லைங்க அண்ணா. 360 டிகிரி உருட்டு. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்தால் நான் ராஜினாமா செய்ய மாட்டேன், அப்படித்தானே? இப்படித்தான் பத்திரிகையாளர் சந்திப்பில் அய்யா எடப்பாடியாரிடம் சரணடைகிறார். ஏற்றுக்கொள்ளப்படவில்லை டா கோமாளி.
நானே உன்னை விரட்டி அடிப்பேன். நீ திமுக தலைவரோட வேலை செஞ்சு தகவல் கசிய விடுறது எல்லாருக்கும் தெரியும். புரட்சித் தலைவி அம்மா, அய்யா எடப்பாடியார், பேரறிஞர் அண்ணாவைப் பத்தி மோசமாகப் பேசுறது எல்லாருக்கும் தெரியும். நாங்க எப்பவும் மறக்க மாட்டோம். பணத்துக்காக எதையும் செய்யுற பேராசைக்கார பொருள் முதல்வாத திமுக அடிமைக்கு நாங்க மறு வாய்ப்பு கொடுக்க மாட்டோம்.
நீங்க பேசுறது உங்க கருத்து இல்ல, நீங்க திமுகவோட ஒரு மினியன், ஒரு அரசியல் தலைவரைப் போல இல்லாம, கவனத்தை ஈர்க்கிற மாதிரி குப்பை கூளங்களைப் பேசுறீங்க. தரம் மோசமான தலைமைக்கு நீ தான் உதாரணம். நீங்க திமுகவோட ஒரு மேலாளர் மட்டும்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications