கண்ணை மட்டும் காட்டுங்க..பாகிஸ்தான் கதைய முடிச்சு விடுறோம்! மோடியின் சிக்னல் கேட்கும் ’டாப்’ தலைகள்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத் துறையின் முப்படைகளும் உச்சகட்ட அலர்ட்டில் இருக்கும் நிலையில், விமானப்படை மற்றும் கப்பற்படை தளபதிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அதில் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. குற்றவாளிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம் அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தருவோம் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் இந்தியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு இரு நாடுகளும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமானப்படை, கப்பற்படை, தரைப்படை என முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அதில் ஒரு தீவிரவாதி பாகிஸ்தான் சிறப்பு படையில் ஆயுத பயிற்சி பெற்ற ஹாசீம் மூசா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய பாதுகாப்புத் துறையின் முப்படைகளும் உச்சகட்ட அலர்ட்டில் இருக்கும் நிலையில், விமானப்படை மற்றும் கப்பற்படை தளபதிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அதில் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதாவது, ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இந்திய விமானப்படையின் தயார்நிலை மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தொடர்பான விரிவான தகவல்களை பிரதமரிடம் விளக்கினார் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சந்திப்பு தொடர்பாக அரசு தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த சந்திப்புக்கு முன்பு, இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி, அரேபியக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து பிரதமருடன் தொலைபேசி வழியாக பேசியதாக தகவல் கசிந்துள்ளது. அரேபிக் கடலில் நடைபெறும் கடற்படை பயிற்சிகளுக்கு இடையே, மேற்குப் படையின் முக்கிய போர் கப்பல்களும், கடல் கண்காணிப்பு விமானங்களும், துணை கப்பல்களும் தயார் நிலையில் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ள முடியும் எனவும், எந்தவொரு உத்தரவும் வந்தால் உடனடியாக செயல்பட தயாராக இருக்கிறது கடற்படை என பிரதமர் மோடியிடம், அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி கூறியதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு படையின் முப்படைகள் அனைத்தும் உச்சகட்ட தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications