தீபாவளி பட்டாசால் காற்று மாசு.. சென்னையில் 3 இடங்களில் அதிக பாதிப்பு பதிவு!
சென்னை: சென்னையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக, 3 இடங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. நேற்று 4 இடங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியிருந்த நிலையில் இன்று மாசு சற்று குறைந்திருக்கிறது.
இந்து மக்களின் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசுகள் வெடித்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் காற்று மாசும் அதிகரித்து வருகிறது. எனவே, பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்றும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே அரசு தரப்பில், பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், நேரக்கட்டுப்பாட்டு இல்லாமல் சிலர் பட்டாசுகளை வெடித்து வருகின்றனர். இதனால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் காற்றின் தரம் மிக மோசனமான அளவில் பதிவாகியிருந்தது. 2022 தீபாவளி அன்று மட்டும் சென்னைவாசிகள் சுமார் 32 சிகரெட்டுகளை புகைக்கும் அளவுக்கு காற்று மாசடைந்திருந்தது. காற்று மாசை அளவிட AQI பயன்படுத்துவார்கள். இந்த அளவீட்டின்படி காற்று மாசு 200ஐ கடந்துவிட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று அர்த்தம். 2022 தீபாவளியன்று சென்னையில் பல இடங்களில் காற்று மாசு 700ஐ கடந்திருந்தது.

பொதுவாகவே காற்றில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்பர் ஆக்சைடுகள், ஹைட்ரோ கார்பன் நுண்துகள்கள் இருக்கும். ஆனால், பட்டாசு வெடிக்கும் பொழுது நுண் துகள்களுடன் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், ஆன்ட்டிமோனி, பாதரசம் போன்ற கன உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம், கந்தகம், நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, ஸ்ட்ரோடியம், , க்ளோரைடு, ஓசோன், பெர்க்ளோரைடு, அலுமினியம், தாமிரம் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் வெளியேறுகின்றன.
நேற்றும் இதேதான் நடந்து வருகிறது. சென்னையில் நேற்று மதியம் நிலவரப்படி 4 இடங்களில் காற்று மாசு 200ஐ கடந்திருக்கிறது. குறிப்பாக ஆலந்தூரில் 257ஆக காற்று மாசு பதிவாகியிருந்தது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டி இருக்கிறது. அதாவது, சென்னை பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 237 ஆகவும், வேளச்சேரி - 219, ஆலந்தூர் - 211 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications