திடீரென முடங்கிய ஏர்டெல் - ஜியோ.. கால் & நெட் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதி! எப்போது சரியாகும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ நெட்வொர்க் முடங்கியுள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் போன் கால் மற்றும் டேட்டா யூஸ் செய்ய முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். தனது நெட்வொர்க்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள ஏர்டெல், அதை சரி செய்யத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

நம் நாட்டின் பல பகுதிகளில் ஏர்டெல் சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் புகாரளித்துள்ளனர். ஏர்டெல் வாடிக்கையாளர்களால் பல இடங்களில் இணையச் சேவையைப் பயன்படுத்த முடியவில்லை. சிலரால் கால் கூட செய்ய முடியவில்லை என புகாரளித்துள்ளனர்.

Airtel Network Outage Hits Users Across India Netizens Flood Social Media with Complaints

ஏர்டெல் நெட்வொர்க்கில் திடீரென ஏற்பட்ட இந்தச் சிக்கலால் மொபைல் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் யூஸ் செய்ய முடியாமல் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். நாடு முழுக்க பலரும் பரவலாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் டெல்லி- என்சிஆர் பகுதியிலேயே பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மாலை 4:30 மணி நிலவரப்படி, சுமார் 3500க்கும் மேற்பட்டோர் டவுன்டிடெக்டர் (Downdetector) தளத்தில் ஏர்டெல் சேவை முடங்கியுள்ளதாகப் பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் மொபைல் டேட்டா மற்றும் குரல் இணைப்பு ஆகிய இரண்டையும் பாதித்துள்ளது. சுமார் 71% யூசர்கள் தங்களால் கால் செய்ய முடியவில்லை என கூறியுள்ளனர். 14% பேர் தங்களால் இணையத்தை யூஸ் செய்ய முடியவில்லை என புகாரளித்துள்ளனர். அதேபோல இன்னும் 15% பேர் தங்களது ஏர்டெல் சிம்மில் சிக்னல் எதுவும் வரவில்லை என கூறியுள்ளனர்.

ஏர்டெல் நிறுவனமும் தனது நெட்வொர்க்கில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாங்கள் தற்போது ஒரு நெட்வொர்க் அவுட்டேஜ்ஜை எதிர்கொண்டு வருகிறோம். எங்கள் குழு பிரச்சினையைத் தீர்க்கவும், சேவைகளை உடனடியாக மீட்டெடுக்கவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்தது.

யூசர்கள் ஏர்டெல் மீது கடந்த சில காலமாகவே தொடர்ச்சியாகப் பல்வேறு புகார்களை முன்வைத்து வருகிறார்கள். குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளில் நீண்ட காலமாகவே பிரச்சினை இருப்பதாகப் புகாரளித்தனர். மேலும், சிலர் 5G திட்டங்களில் ரீசார்ஜ் செய்தபோதிலும், 4ஜி டேட்டா யூஸ் செய்யும்போது கூடுதலாகப் பணம் பிடிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதேபோல் ஏர்டெல் நெட்வொர்க்கை தொடர்ந்து ஜியோ மற்றுமு் விஐ நெட்வொர்க்கும் முடங்கி உள்ளது. இதனால் அந்த வாடிக்கையாளர்களும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+