அரசு மருத்துவமனைக்கு கையுறை, முகக்கவசம் வழங்குவதாக ரூ.3.20 கோடி பணமோசடி விவகாரம்: தொழிலதிபர் கைது
கோவிட் -19 பாதுகாப்பு சாதனங்களான முகக்கவசம் கையுறை ஆகிய பொருட்களை அரசு மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்ய போலியான கொள்முதல் ஆணை வழங்கி ரூ.3 கோடியே 20 லட்சம் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஐசிஎம்சி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் விவசாயத்திற்கு உரம் தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வருபவர் கண்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை கொடுதார். அவரது புகாரில் மத்திய பொதுத்துறை நிறுவனமான ஐடிஐயில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் டிஜிஎம் பொறுப்பில் இருந்த கேபிஎன் ராஜன் என்பவர் என்னை அணுகினார்.

கோவிட்-19 லிருந்து பாதுகாக்க தேவைப்படும் பாதுகாப்பு சாதனங்களான முகக்கவசம், கையுறை போன்றவைகள் அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறையாக உள்ளதால் மேற்படி பொருட்களை கொள்முதல் செய்ய தங்கள் நிறுவனத்திற்கான கிடைத்துள்ளதாகவும் அரசு நிறுவனத்தால் முன் பணம் முதலீடு செய்ய இயலாது என்பதால் தனியார் முதலீடு செய்தால் முகக்கவசம், கையுறை ஆகிய பொருட்களை கொள்முதல் செய்து மத்திய மற்றும் மாநில அரசு மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினார்.
அதன்பேரில் கே.வி.என்.ராஜன் இமெயில் மூலம் அளித்த உத்தரவின்படி அவர் அறிமுகம் செய்த கம்பெனிகளுக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் பணம் செலுத்தியதும் அதனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனங்கள் சொன்னபடியே எவ்வித பொருட்களையும் சப்ளை செய்யாமல் முறையற்ற நஷ்டம் ஏற்படுத்தியது. என புகாரில் தெரிவித்திருந்த அடிப்படையில் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான கே.வி.என்.ராஜனும் தனக்கு அதிகாரமில்லை என தெரிந்தும் அரசு உயர்பதவியில் இருந்துக் கொண்டு 3 கோடியே 20 லட்சத்தை முறையற்ற வகையில் தனக்கு வேண்டப்பட்ட 3 பெரும் நிறுவனங்களுக்கு அனுப்ப வைத்து அவர்களிடம் அவர் பெரும் தொகை கமிஷனாக பெற்று பெரிய அளவில் மோசடி செய்ததும் தெளிவாக தெரிய வந்த நிலையில் முதல் குற்றவாளியான கேவிஎன்.ராஜன் கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வந்தனர். மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் நம்பிக்கை மோசடி பிரிவு தலைமையிலான போலீசார் தொடர் தேடுதலில் முதல் குற்றவாளி கேவிஎன் ராஜனின் நண்பரும் நெருங்கிய கூட்டாளியுமான ஐகான் ஆஃபீஸ் எக்யூப்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளரான ஆலந்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம்(52) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications