ஆல் இஸ் நாட் வெல்! திருமாவிற்கு எடப்பாடி பார்வேர்ட் செய்த மெசேஜ்! ஸ்டாலினுக்கு போன உளவு வார்னிங்
சென்னை: திருமாவின் அதிமுக அழைப்புக் குறித்து உளவுத்துறையினர் சில பின்னணி தகவல்களை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் தெரிவித்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடியுடன் நெருக்கமாகத் தான் இருந்து வருகிறார் திருமா.
இப்படிப்பட்ட நிலையில் திருமா கொடுத்த 2 ஸ்டேட்மென்ட் திமுகவை டென்சன் ஆக்கி உள்ளதாம். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணித்து வரும் திருமாவளவன் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதிமுக வரலாம்.. எந்த கட்சியாக இருந்தாலும் வரலாம் என்று திருமா ஓபன் அழைப்பு விடுத்துள்ளார்.

அதோடு இல்லாமல் தமிழ்நாட்டில் இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இலவசங்களை கொண்டு வருவதற்கு பதிலாக.. மது ஒழிப்பு திட்டங்களை கொண்டு வரலாம். மது ஒழிப்பு.. மது விலக்கு கொண்டு வந்தால் போதும். அந்த நிதி இலவசங்களை கொடுக்க வேண்டியது இல்லை என்றார்.
ஸ்டாலினுக்கு கோபம்: அரசுக்கு வருவாய் கொடுக்கும் முக்கிய துறையாக டாஸ்மாக் இருக்கிறது. அதன் மீது கை வைத்தால் தான் ஸ்டாலினுக்கு சுர்ரென கோபம் வரும். அதனால், கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து விடுதலை சிறுத்தைகள் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினால் அது திமுக கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தும் என எடப்பாடிக்கு ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டது.
அதனை திருமாவுக்கு ஃபார்வேர்ட் செய்திருக்கிறார் எடப்பாடி. அதனையொட்டிதான், மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டார் திருமா என்கிற தகவலும், தற்போது மாநாட்டுக்கு அதிமுகவை அழைக்க வேண்டும் என்கிற யோசனையும் அதிமுக தரப்பிலிருந்தே சொல்லப்பாட்டிருக்கிறது. திருமா அதற்கு தலையாட்டுகிறார் என்கிற தகவலும் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டிருக்கிறது.
திருமாவின் அழைப்பில் அதிமுகவின் பின்னணியும் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதுபோல, அதிமுக ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, ''அழைப்பு குறித்து முடிவு செய்ய வேண்டியது கட்சியின் தலைமை தான். ஆனால் விடுதலை சிறுத்தைகள் முன்னெடுத்துள்ளது நல்ல விஷயம். அதுவும் கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
மது விலக்கு என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. இதற்காக கருப்பு சட்டையும், பதாகைகளும் ஏந்தி போராடியதை நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள். எனவே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதை தவறவிட்டு விட்டனர். இதை திருமாவளவன் சுட்டிக் காட்டுவது நல்ல விஷயமாக பார்க்கிறோம்'' என்று திமுகவுக்கு கடுப்பை ஏற்றும் வகையில் பதிலளித்திருக்கிறார்.
இந்த நிலையில், திருமாவின் மாநாட்டிற்கு அதிமுக சீனியர்களில் ஒருவரை அனுப்பி வைக்க எடப்பாடி முடிவு எடுத்து விட்டாராம். யாரை அனுப்பி வைப்பது என்பதை சீனியர்களிடம் கலந்தாலோசிக்கவிருக்கிறார் எடப்பாடி. மாநாட்டுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், இந்த மாத இறுதியில் முடிவெடுக்கலாம் என்றும், அதுவரையில் திமுக கூட்டணிக்குள் சிக்கல் என்கிற பேச்சு இருந்து கொண்டே இருக்கட்டும் என்றும் சொல்லி வருகிறாராம் எடப்பாடி
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications