விட்டு வெளுக்கும் மழைக்கு இடையே.. சென்னைக்கு பிரம்மாண்ட குட் நியூஸ்! இது போதுமே.. பிரச்சனையே இல்லையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழைக்கு இடையே முக்கியமான நல்ல செய்தி ஒன்று சென்னைக்கு கிடைத்து உள்ளது.

கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் விடாமல் பதிவானது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

All lakes and dams are getting enough water flow in Chennai amid heavy rain from yesterday

முக்கியமாக சென்னையில் 10 நாட்களாக விடாமல் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையாக அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.

சென்னையில் கோடை காலத்திலும் ஒருநாள், இரண்டு நாள் அடையாளமாக மழை பெய்யும். இதனால் மக்கள் நிம்மதி அடைவார்கள். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே மே மாதத்தில் நடக்கவில்லை. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் இருந்தது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

ஜூன் மழை: இதனால் சென்னையில் ஏரிகளில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது. தினசரி குடிநீருக்கு எடுக்கப்பட்ட நீர் காரணமாக சென்னையில் நீர் அளவு குறைந்து கொண்டே வந்தது. ஏரிகளிலும் நீர் அளவு வேகமாக குறைந்தது.

All lakes and dams are getting enough water flow in Chennai amid heavy rain from yesterday

சென்னையில் நீர் அளவு 57 சதவிகிதம்தான் ஏரிகளில் இருந்தது. இதனால் சென்னையில் வரும் நாட்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமோ என்று கேள்வி எழுந்தது. குடிநீர் தட்டுப்பாடு வரும் நாட்களில் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தீவிரமாக அதிகரித்து வந்த வெயிலுக்கு இடையில் ஜூன் முதல் வாரம் 2 நாட்கள் திடீரென மழை பெய்தது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் சாரல் மழை பெய்து வந்தது.

திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது. மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்தது.

இப்படி சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்த நிலையில் ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்தது. முக்கியமாக புழல் ஏரியில் தண்ணீர் இருப்பு 2173 மில்லியன் கன அடியாக இருந்தது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி ஆகும்.

கிரிஷ்ணாவில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அளவும் உயர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் தினசரி குடிநீர் தேவைக்கு எளிதாக 159 கன அடி தண்ணீர் கொண்டு செல்ல முடிகிறது.

மீண்டும் மழை: இந்த நிலையில் நேற்றில் இருந்து சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலையில் இருந்து மிக தீவிரமாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல் பின் வரும் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.

நந்தனம் - 11.7 செ.மீ. தரமணி - 11.7 செ.மீ. செம்பரம்பாக்கம் 10.9 செ.மீ - மேற்கு தாம்பரம் - 8 செ.மீ. நுங்கம்பாக்கம் - 6.7 செ.மீ. சென்னை தவிர்த்து காஞ்சிபுரம் - 7.9 செ.மீ. திருவள்ளூர் - 5 செ.மீ. மாவட்டங்களில் ஆகிய அளவு மழை பதிவாகி உள்ளது.

இதனால் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரியில் நீர்இருப்பு 2178 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 200 கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 425 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 21 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 428 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீர் தேவைக்காக 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் இருப்பு அதிகரித்த காரணத்தால் நீர் அனுப்புவது எளிதாகி உள்ளது. சோழவரம் ஏரியிலும் கணிசமான அளவு நீர் உயர்ந்து உள்ளது. கிரிஷ்ணாவில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அளவும் உயர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் தினசரி குடிநீர் தேவைக்கு எளிதாக 159 கன அடி தண்ணீர் கொண்டு செல்ல முடிகிறது.

இதனால் மழை காலம் வரை சென்னையில் குடிநீர் பிரச்சனை இருக்காது என்று மாநகராட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+