சென்னை சாலை போக்குவரத்தில் அதிரடி மாற்றம்! வந்தது "பஸ் பே".. ஆட்டோக்களுக்கு பெரிய கட்டுப்பாடு
சென்னை: சென்னை சாலை போக்குவரத்தில் அதிரடி மாற்றம் ஒன்று செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ஆட்டோக்களுக்கும் கட்டுப்பாடு ஒன்று கொண்டு வரப்பட்டு உள்ளது.
சென்னையில் சாலை போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. சமீபத்தில் சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

சமீபத்தில் எஸ்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முயற்சியிலே முழுமையாக ஈடுபட வேண்டும்.
சென்னை உள்ளிட்ட தரக்கூடிய ஒன்றாக பல இருப்பது மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் போக்குவரத்து நெரிசல். குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும், என்று உத்தரவிட்டு இருந்தார்.
சென்னை பஸ் பே: இந்த நிலையில்தான் சென்னை சாலை போக்குவரத்தில் அதிரடி மாற்றம் ஒன்று செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ஆட்டோக்களுக்கும் கட்டுப்பாடு ஒன்று கொண்டு வரப்பட்டு உள்ளது அதன்படி ஆட்டோக்கள் பஸ் பேயில் செல்ல கூடாது. அங்கே நிற்க கூடாது என்று கொண்டு வரப்பட்டு உள்ளது.
பஸ் பே என்றால் ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு முன் சில மீட்டர்களுக்கு தூரத்திலேயே பஸ் பே ஆரம்பிக்கும். இதில் பேருந்துகளை தவிர வேறு வாகனங்கள் செல்லாது. அதன்பின் பேருந்து நிறுத்தும் முடிந்து சில மீட்டர்கள் வரை இந்த பே தொடரும். இதில் பேருந்துகள் மட்டுமே செல்லும். பேருந்துகள் நடு ரோட்டில் நிற்பதையும், அங்கேயே பயணிகளை ஏற்றி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதையும் தடுக்கும் விதமாகவும், பேருந்துகள் எளிதாக இங்கும் அங்கும் செல்வதை உறுதி செய்யும் விதமாக இந்த விதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஆய்வு: சமீபத்தில்தான் தலைமைச் செயலாளர் அவர்கள் மண்டலம் வாரியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மூன்றாவது ஆய்வுக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சீரான போக்குவரத்து குறித்தும், நடைபெற்று வரும் சாலைப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள்.
இக்கூட்டத்தில், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் ஆகிய துறைகள் மேற்கொண்டு வரும் சாலை வெட்டு அறிவுறுத்தினார்கள். முடிக்குமாறு மேலும், மண்டலம் வாரியாக பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர், உதவி ஆணையர், போக்குவரத்து காவல் துறை, உதவி செயற் பொறியாளர், நெடுஞ்சாலை துறை, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் அலுவலர் மற்றும் உதவி செயற் பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கள ஆய்வு செய்து போக்குவரத்து தடையின்றி செல்வதை உறுதி படுத்த வேண்டும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications